ஜல்லிக்கட்டு: ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதிக்கு சீமான் வாழ்த்து!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ‘டக்கரு டக்கரு’ என்ற புதிய இசை ஆல்பத்தை தயாரித்து வெளியிட்டுள்ள இளம் இசையமைப்பாளரும் பாடகருமான ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து சீமான் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

ஜல்லிக்கட்டுத் தடை என்பது காளை மாட்டினத்தை அழிக்கும் திட்டமிட்ட செயல் என்றும், இந்தத் தடைக்குப் பின்னால் சர்வதேச அரசியல் இருப்பதையும், இது தமிழர்கள் மீதான அடக்குமுறை என்றும், தடையை உடைக்கப் போராடி வருபவர்களும், நாம் தமிழர் கட்சியும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மக்கள் மன்றத்தில் எடுத்து எடுத்து வைத்தும் வருகிறது.

ஜல்லிக்கட்டுத் தடை, அதற்குப் பின்னால் இருக்கும் அரசியல் பற்றித் தம்பி ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி உருவாக்கிருக்கும் பாடல் இன்று பார்த்து நெகிழ்ந்து மகிழ்ந்தேன். தனது ஆகச்சிறந்த திறமை கொண்டு, ஜல்லிக்கட்டு தடைக்குப் பின்னால் இருக்கும் அரசியலை கூறி, இந்தப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியிருக்கிறார்.

உணர்வுமிக்கத் தம்பிக்கு என் அன்பும் வாழ்த்துகளும்…

இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.