நேற்று வரை “அமாவாசை”; இன்று முதல் “நாகராஜ சோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ”!
அமரர் மணிவண்ணன் இயக்கத்தில் உருவான ‘அமைதிப்படை’ படத்தில், ஒரு அரசியல்வாதியின் (மணிவண்ணனின்) எடுபிடியாக கூனிக்குறுகி இருந்த ‘அமாவாசை’ (சத்யராஜ்), இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவுடன் ‘நாகராஜ சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ” என்றாகி, தன்னை வளர்த்துவிட்ட அரசியல்வாதியிடமே தெனாவட்டு காட்டுவார்.
ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த சசிகலா, ஜெயலலிதா வகித்துவந்த, அதிகாரம் மிக்க அ.இ.அ.தி.முக. பொதுச்செயலாளர் பதவிக்கு இன்று நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், ‘அமைதிப்படை’ திரைப்படம் தான் பலருக்கும் ஞாபகம் வருகிறது.
திரைப்பட ஒளிப்பதிவாளர் காசி தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பது:
“நேற்று வரை அமாவாசை
இன்று முதல் நாகராஜ சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ.
சோழர் பரம்பரையில் ஒரு எம்.எல்.ஏ.”