அந்தமான் சிறையிலிருந்த சாவர்க்கர் ஒரு பறவை மேலேறி பறந்து இந்தியாவுக்கு வந்து போனாராம்! பாட புத்தகத்தில் சங்கிகள் கட்டுக்கதை!!

காலனிய பிரிட்டிஷ் ஆட்சியில், 50 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, ஆங்கிலேயர்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்ததால், அந்தமான் சிறையிலிருந்து ஆர்எஸ்எஸ் பெருந்தலைவர் சாவர்க்கர் 12 ஆண்டுகளிலேயே விடுவிக்கப்பட்ட உண்மை உலகத்திற்கே தெரிந்த பின்னணியில், புத்தம் புதிய கட்டுக்கதைகளை உருவாக்கி வருகின்றனர், கர்நாடக சங்கிகள்.

அந்தமான் சிறையிலிருந்த சாவர்க்கர், தினம் தினம் சிறையிலிருந்து ஒரு சிறியப் பறவை மேல் ஏறிப் பறந்து இந்தியாவுக்கு வந்து போய்க் கொண்டு இருந்தாராம். அவ்வளவு தேசபக்தியாம்!

ரோஹித் சக்ரதீர்த்தா தலைமையில் கர்நாடக பாஜ அரசு அமைத்த பாடத்திட்ட குழு, 8 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில், ‘காலத்தை வென்றவர்கள்’ என்கிற பெயரில் புதிதாக இணைத்துள்ள பகுதியில் தான் சாவர்க்கர் பற்றிய இத்தகைய அண்டப்புளுகு இடம் பெற்றுள்ளது.

அந்தமான் சிறையில் ஈ, எறும்புகள் கூட நுழைய துவாரம் இல்லாத இடத்தில் அடைக்கப்பட்டு இருந்தார். வரலாறு இப்படியிருக்க… “சாவர்க்கர் தினம் தினம் ஒரு புல்புல் பறவை மீது அமர்ந்து சிறையிலிருந்து வெளியேறி, சொந்த தாய்நாட்டு / இந்திய நிலப்பகுதிக்கு சென்று தரிசித்து வந்தார்” என்று இந்தப் பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாவர்க்கரை மிகப்பெரும் சுதந்திரப் போராட்ட வீரராக மாற்றும் முயற்சியை பாஜக கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. தற்போது அடுத்த கட்டமாக அனுமார் கதாபாத்திரம் போல அல்லது மாயாஜால கதாநாயகன் போல மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அறிவியல்சார் மனோபாவத்தை பள்ளி மாணவ மாணவியரிடமிருந்து அகற்றும் முயற்சி இதுவாகும்.

இதன்மீது எதிர்ப்பு உருவான உடன், கர்நாடக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நாகேஷ், “சரியாகத் தான் இந்தக் கதை சொல்லப்பட்டுள்ளது” எனச் நற்சான்றிதழும் வழங்கியுள்ளார்.

பறவை மீது மனிதன் ஏறி பறப்பது இந்துப் புராணங்கள் இதிகாசங்களில் வரும் கட்டுக்கதைகள்! சங்கிகளின் சாகாக்களில் இத்தகைய புராண புனைசுருட்டுக் கதைகள் நிறைய போதிக்கப்படுவது உண்டு.

¶எச்சரிக்கை :- சங்கிகளிடம் கோயாபல்ஸ் தோற்று வருகிறார். “சாவர்க்கர் தான் காந்தி உடலில் புகுந்து இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித் தந்தார்” என்றும் கூட எதிர்காலத்தில் புதிய பாடங்கள் உருவாக்கப்படலாம்!

Chandra Mohan