தொழிலதிபரை மணந்தார் நடிகை சங்கவி: மீனா நேரில் வாழ்த்து!
![](http://www.heronewsonline.com/wp-content/uploads/2016/02/05.jpg)
1993ஆம் ஆண்டு வெளிவந்த ‘அமராவதி’ படத்தில் அஜித்குமாருக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை சங்கவி. பின்னர் விஜய்க்கு ஜோடியாக ‘ரசிகன்,’ ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ ஆகிய படங்களில் நடித்தார். மேலும், ‘நாட்டாமை,’ ‘கட்டுமரக்காரன்,’ ‘லக்கிமேன்,’ ‘சேலம் விஷ்ணு,’ ‘மன்னவா,’ ‘உளவுத்துறை,’ ‘ரிஷி’ உள்பட பல படங்களிலும் அவர் நடித்து இருக்கிறார்.
கடந்த சில வருடங்களாக அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். இந்நிலையில் சங்கவிக்கும், வெங்கடேஷ் என்ற. தொழில் அதிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் பெங்களூரில் இன்று (புதன்கிழமை) காலை நடைபெற்றது.
நடிகை மீனா உள்ளிட்ட திரை பிரபலங்கள் இத்திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை நேரில் வாழ்த்தினார்கள்.