பிரபல நடிகர் சாய் பிரசாந்த் விஷம் குடித்து தற்கொலை

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்துவந்த பிரபல நடிகர் சாய் பிரசாந்த் விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டார். அவரது திடீர் மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி, பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து, பிறகு வெள்ளித்திரையிலும் நடிக்கத் தொடங்கியவர் சாய் பிரசாந்த். ‘முன்தினம் பார்த்தேனே’, ‘வடகறி’, ‘நேரம்’ உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இவர் தொடர்ந்து தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துவந்தார்.

இவரது அப்பா சுபாஷ். அம்மா லலிதா சுபாஷ் தமிழக பாஜ.க.வில் துணைத் தலைவராகவும், திரைப்பட தணிக்கைக்குழு உறுப்பினராகவும் இருந்தவர். இத்தம்பதியரின் ஒரே மகன் சாய் பிரசாந்த்.

பெற்றோர்கள் பெங்களூரில் உள்ள நிலையில், இன்று (ஞாயிறு) இரவு சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தனியாக இருந்த சாய் பிரசாந்த், மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இவரது நண்பர்கள் மற்றும் போலீசார் கதவை உடைத்து இவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவரது தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஏற்கனவே நிரஞ்சனா என்பவருடன் திருமணமாகி விவாகரத்தான இவர், கடந்த 3 மாதங்களுக்கு முன் தான் சுஜிதா என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த இரண்டாவது மனைவியும் சண்டை போட்டுவிட்டு வீட்டைவிட்டு வெளியேறியதால் மனமுடைந்த சாய் பிரசாந்த் இந்த விபரீத முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

சாய் பிரசாந்த் தற்கொலை செய்துகொள்வதற்கு முன், ஒரு கடிதம் எழுதிவைத்துள்ளார். அதில்,

”எனது அன்புக்குரிய சுஜிதா சாய் பிரஷாந்துக்கு

உன் மீது அதீத காதல் வைத்திருந்தேன். பொஸஸிவ் காரணமாக உன்னை நான்கு முறை அடித்தேன். ஆனால் கவலைப்படாதே. எனது மரணம் உனக்கு எந்த வகையிலும் இடையூறு அளிக்காது. எனது மரணத்திற்கு கண்டிப்பாக நீ காரணமாக இருக்க முடியாது. ஒரு சத்தியம் மட்டும் செய்கிறேன். உனது 33 சவரன் நகை கண்டிப்பாக திரும்பி வரும்.

எனது காதல் எப்போது உண்மையானது. நான் செல்வதால் தயவு செய்து அழாதே ரக்‌ஷிதாவும் தான் (மகள்). என் பெற்றோர்கள் கண்டிப்பாக உன்னையும் உனது குடும்பத்தாரையும் கேள்வி கேட்க மாட்டார்கள். உன் சித்தப்பா என் அப்பாவிடம் உபயோகித்த வார்த்தைகளுக்காக மன்னிப்புக் கேட்கும்படி சொல்லவும். நான் மட்டுமே எனது மரணத்திற்குக் காரணம். என் பெற்றோர் உனக்கு ஐந்து லட்சம் பணமும், உனது நகையும் கொடுப்பார்கள். எனது மரணத்திற்குப் பிறகாவது தயவு செய்து உனது கோபத்தை விட்டுவிடு. நான் ரக்‌ஷிதாவுக்கு எப்போதும் ஒரு நல்ல அப்பா. மிஸ் யூ ரக்‌ஷிதா, சுஜிதா, அம்மா, அப்பா, சுஜி சித்தப்பா, நிரஞ்சனா குடும்பம், ராகுல் மற்றும் ரோகித், சுஜிதா குடும்பம், மற்றும் சரவண குமார்.

ரக்‌ஷிதாவின் புரிதலுக்கு,

ஒரு கண்டீஷன். யாரும் சண்டையிடவோ அழவோ கூடாது. நான் மட்டுமே எனக்கு பிரச்னை. எல்லோருடனும் இணைப்பில் இருக்கவும். புரிந்துகொள்.

ராடான் மீடியா முக்கியமாக சன் நெட்வொர்க், என் அம்மா (ராதிகா சரத்குமார்) ஆகியோருக்கு நன்றி. மிஸ் யூ லாட் அம்மா, ரக்‌ஷிதாவுக்கு எனது ஆசீர்வாதங்கள் எப்போதும் உண்டு. லவ் யூ தாமரை டீம், மற்றும் சுகுமார் அண்ணா. நன்றி நிரஞ்சனா குடும்பத்தார்.

“லவ் யூ மேட்லி சுஜிதா சாய் பிரசாந்த் ..உம்மா”

டேக் கேர் எவ்ரிபடி உங்களை எல்லாம் சிரிப்புடன் விட்டுச் செல்கிறேன்”  என்று எழுதியுள்ளார்.

சாய் பிரசாந்தின் இந்த திடீர் மரணம் திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமீபகாலமாக சீரியல் நடிகர்கள், இயக்குனர்கள் தற்கொலை செய்துவருவது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.