“காந்தியும், ஹிட்லரும் ஒரே வீட்டில் இருந்தால்” என்ற கற்பனையின் திரைவடிவம் ‘சகுந்தலாவின் காதலன்!’
பிரசாத் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் பி.வி.பிரசாத் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிக்கும் படம் ‘சகுந்தலாவின் காதலன்’. நாயகியாக பானு நடிக்கிறார். இவர்களுடன் கருணாஸ், சுமன், பசுபதி, நான் கடவுள் ராஜேந்திரன், ஜெகன், ராஜ்கபூர், மனோபாலா, மனோ சித்ரா, ஜார்ஜ், நிப்பு ஆகியோர் நடிக்கிறார்கள்.
இப்படத்தை தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிப்பதோடு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, இசை அமைத்திருக்கிறார் இயக்குனர் பி.வி.பிரசாத். இவர் ‘காதலில் விழுந்தேன்’ படத்தை இயக்கியவர். இவர் ‘சகுந்தலாவின் காதலன்’ படம் பற்றி கூறுகையில், “காதலில் விழுந்தேன்’ எப்படி ஜனரஞ்சகமான படமாக வெற்றி பெற்றதோ, அது மாதிரி ‘சகுந்தலாவின் காதலனு’ம் வெற்றி பெறும். இதில் அத்தனையும் சமமாக கலந்து உருவாக்கப்பட்டுள்ளது.
“இந்த படத்தில் இசையமைப்பாளர் என்கிற கூடுதல் பொறுப்பையும் நான் ஏற்றிருக்கிறேன். எனக்கும், என் கதாபாத்திரத் தன்மைக்கும் என்ன மாதிரியான இசை ஒத்துப் போகுமோ அதை மட்டுமே நான் பயன்படுத்தி இருக்கிறேன். ‘காதலில் விழுந்தேன்’ படத்தில் நகுல் கதாபாத்திரம் எப்படி பேசப்பட்டதோ, அதைப்போல இதில் ஹரி கிருஷ்ணன் என்கிற என் கதாபாத்திரம் வித்தியாசமாக உணரப்படும்.
“ஒரே வீட்டில் காந்தியும் ஹிட்லரும் இருந்தால் எப்படி இருக்கும் என்கிற கற்பனைக்கான திரை வடிவமே இந்தப் படம். காந்தி தனது பக்கம் ஹிட்லரை இழுக்க முயற்சிப்பதும், ஹிட்லர் தனது பக்கம் காந்தியை இழுக்க முயற்சிப்பதும் தான் கதை. இதை எந்த அளவுக்கு சுவாரஸ்யமாக சொல்ல முடியுமோ அந்த அளவிற்கு சொல்லி இருக்கிறோம். சொல்ல வந்த இந்த கதையை ஐந்து கோணங்களில் ஐந்து சம்பவங்களில் உள்ளடக்கி சொல்லி உள்ளோம்.
“110 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. சென்னை, ஹைதராபாத், ராஜமுந்திரி, செங்கல்பட்டு, பாண்டிச்சேரி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது” என்றார் இயக்குனரும் நடிகருமான பி.வி.பிரசாத்.
ஒளிப்பதிவு – ராசாமதி
வசனம் – ஆ.வெண்ணிலா
கலை – சகு
நடனம் – பாபி ஆண்டனி
ஸ்டண்ட் – சுப்ரீம் சுந்தர், ஆக்ஷன் பிரகாஷ
எடிட்டிங் – வி.டி.விஜயன், என்.கணேஷ் குமார்
தயாரிப்பு மேற்பார்வை – மோகன், கணேசன்
ஊடகத் தொடர்பு – மௌனம் ரவி