எச்சரிக்கை: தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீசும் ஆர்.எஸ்.எஸ். கும்பல்! விழிப்புடன் இரு!
தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக பெட்ரோல் குண்டு, பைப் வெடிகுண்டு, நாட்டு வெடிகுண்டு சம்பவங்களில் இந்துத்துவ பயங்கரவாதிகள் நேரிடையாக சம்பந்தப்பட்டிருப்பதை பல செய்திகள் வெளிக்கொண்டுவந்தும் காவல்துறையும் அரசும் கண்டும் காணாமல் இருக்கின்றன.
மிகச் சமீபத்தில் கோவையில் சசிக்குமார் கொலையை முன்னிட்டு இந்துத்துவக் காலிகள் திட்டமிட்டு அரங்கேற்றிய தாக்குதல்களில் கடையுடைப்பு, பிரியாணி திருட்டு, செல்போன் கொள்ளை, வாகனங்களுக்கு தீ வைப்பு என்ற பட்டியலில் குண்டு வைப்பும் அடங்கியிருக்கிறது.
30-09-2016 அன்று தெற்கு கோவை, பொடனூர் பகுதி பள்ளிவாசல் மீது அதிகாலை நேரத்தில் அடுத்தடுத்து நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன. குண்டு வெடிக்கும் சத்தம் கேட்ட பொதுமக்கள் உயிருக்கு பயந்து வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கின்றனர். நாளிதழ்களில் பொடனூர் குண்டு வெடிப்பு சம்பவம் பெட்டி செய்தி அளவிற்குகூட வரவில்லை.
காவிக்காலிகளின் வெடிகுண்டு பயங்கரவாதம் கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் இந்தியாவின் வடமாநிலங்களில் வலுவாக வேரூன்றியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் பொதுமக்கள் இனி மிக விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். அதற்கு காவிக்கூட்டம் வெடிகுண்டு சம்பவங்களை இதுவரை எவ்விதம் அரங்கேற்றியிருக்கின்றனர் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது முக்கியம்.
பொடனூர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு முன்பாக திருப்பூர் மாவட்டம் அடுத்தடுத்த பெட்ரோல் வெடிகுண்டு சம்பவங்களால் கலகலத்துப் போயிருந்தது. 29-02-2016 அன்று திருப்பூர் இந்து முன்னணி தலைவர் கோபிநாத் காரில் செல்லும்போது தன் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக புகார் கூறியிருந்தார். காரின் முன்பகுதி எரிந்த நிலையில் புகைப்படங்கள் வலைத்தளங்களில் வேகமாக பரவின. இந்த குண்டுவெடிப்பிற்கு பின்னணியில் ‘ஜிகாதி பயங்கரவாதிகள் இந்து தலைவர்களை குறிவைத்து கொல்கிறார்கள்’ என்று காவிக்கும்பல் வழக்கம் போல தன் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டது. இதை வைத்து திருப்பூரில் கலவரச் சூழலை உருவாக்க முனைந்தார்கள். வழக்குபதிவு செய்து முருகன் என்பவரை கைது செய்து விசாரித்ததில், கோபிநாத்தின் ஆலோசனையின் பெயரிலேயே கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட முருகன் அதே இந்துத்துவ கும்பலைச் சேர்ந்த தொழிற்சங்கத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோபிநாத் இதற்கு முன்பாக தனக்கு தபால் வெடிகுண்டு வந்ததாக புரளியைக் கிளப்பியிருக்கிறார். பிடிபட்ட முருகன், தபால் வெடிகுண்டும் கோபிநாத்தின் திட்டம் தான் என்று தெரிவித்திருக்கிறார். தற்பொழுது முருகன் சிறையிலும் கோபிநாத்தும் பிற காவிக் கும்பலும் தலைமறைவாகவும் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கோபிநாத்தை தேடிவருகிறோம் என்று சொன்னதுடன் காவல்துறை தன் கடமையை முடித்துக் கொண்டது.
கோபிநாத்தைப் போன்றே இந்து முன்னணியின் பல்வேறு நிர்வாகிகள் பெட்ரோல் குண்டுவீச்சு நாடகத்தில் கைதேர்ந்தவர்களாக இருக்கின்றனர். வேலூர் சத்துவச்சாரி இந்து முன்னணி நிர்வாகி மகேஷ், தன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக புகார் கொடுத்திருக்கிறார். சங்கரன்பாளையத்தைச் சேர்ந்த இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் சீனிவாசன், தனக்குச் சொந்தமான பேருந்தில் பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டதாகச் சொல்லியிருக்கிறார். விசராணை தரப்பு இரண்டு சம்பவங்களும் ஒரே மாதிரியாக நடந்திருப்பதாகச் சொல்கிறது.
கோபிநாத், சீனிவாசன், மகேஷ் போன்ற காவி வானரங்களின் வெடிகுண்டு அரங்கேற்றங்கள் தமிழ்நாட்டிற்கு புதிதல்ல. 2008 தென்காசி குண்டுவெடிப்பு சம்பவத்தில், ஆர்.எஸ்.எஸ் காலிகளே ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் குண்டு வீசி கலவரத்தை நடத்த முயன்றனர் என்பதிலிருந்து இந்துத்துவ கும்பல் இதை ஓர் உத்தியாகவே செயல்படுத்திவருவதைக் காணலாம். இதில் தென்காசி குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்த ரவி பாண்டியன், குமார், நாராயண சர்மா ஆகிய மூவரில் நாரயண சர்மாவிற்கு பைப் வெடிகுண்டு தயாரிப்பதில் மிகுந்த நிபுணத்துவம் உண்டு என்பது தனிக்கதை.
இந்த சம்பவங்களை தொகுப்பாக பார்க்கிறபொழுது, ஒவ்வொரு கலவரச் சூழலிலும் முன்தயாரிப்பாக பெட்ரோல் மற்றும் பைப் வெடிகுண்டுகள் எங்கிருந்து வருகின்றன? காவிக்கூட்டம் தமிழ்நாட்டில் வெடிகுண்டுகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறதா? என்ற கேள்விகள் எழுகின்றன.
சான்றாக, மிகச் சமீபத்தில் 11-09-2016 அன்று இரவு, திருப்பூர் உகையனூர் பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் நடத்திவரும் பனியன் கம்பெனியில் திடீரென்று பெட்ரோல் குண்டு வெடிக்கிறது. இந்த சண்முகம் திருப்பூர் மாவட்ட இந்து முன்னணியின் பொருளாளர் ஆவார். இக்குண்டுவெடிப்பை முன்னிட்டு திருப்பூரில் கடையடைப்பு நடத்துவதாக இந்து வானரங்கள் கலவரச் சூழலைக் கட்டியமைத்தன. இச்சம்பவத்தின் விசாரணை நமக்கு அதிர்ச்சியான விசயத்தை முன்வைக்கிறது. அதாவது பெட்ரோல் குண்டு வெடித்த சமயத்தில், குண்டு வெடித்த பனியன் கம்பெனி வெளியிலிருந்து பூட்டப்பட்டிருந்ததாம். இதில் இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று காவி ஓநாய் ஹெச்.ராஜா சொல்வதைப் போன்று பங்களாதேஷ் பயங்கரவாதிகள் கம்பெனியின் கதவைப் பூட்டிவிட்டு குண்டு போட்டிருக்க வேண்டும். அல்லது பனியன் கம்பெனியில் முன்கூட்டியே பதுக்கி வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்திருக்க வேண்டும்.
பனியன் கம்பெனி போர்வையில் வெடிகுண்டு முன்கூட்டியே பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறதா? அல்லது வெடிகுண்டை அசெம்பிள் செய்யும்போது வெடித்ததா? என்பதை காவல் துறை இதுவரை விசாரிக்கவேயில்லை! இதுவரை பல்வேறு வெடிகுண்டு புகார்கள் பொதுவெளிக்கு வந்துவிட்ட பிறகு இந்து முன்னணியாளர்களின் வீட்டிலும் தொழிற்சாலையிலும் முறையான சோதனையை காவல் துறை செய்திருக்க வேண்டும்.
ஏனெனில் தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் பிற மாநிலங்களில் காவிக் கும்பல் வீட்டிலேயே வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. முதன்முறையாக 2006ஆம் ஆண்டு மகராஷ்ட்ரா மாநிலம் நாண்டட் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் கும்பல் வீட்டிலயே வெடிகுண்டு தயாரித்தபொழுது தற்செயலாக வெடித்ததில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த சம்பவத்திற்கு பிறகுதான் காவிக்கும்பல் வெடிகுண்டு தயாரிப்பது வெளிச்சத்திற்கு வந்ததது. நாட்டையே உலுக்கிய மகராஷ்ட்ராவில் நடந்த மாலேகான் குண்டுவெடிப்பு, மத்திய பிரதேசம் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு, சம்ஜூதா விரைவு ரயில் குண்டுவெடிப்புகளை ஆர்.எஸ்.எஸ் தான் திட்டமிட்டு இயக்கியது என்பது அம்பலமாகிப் போனது.
வடமாநிலங்கள் அல்லாது கேரளாவிலும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் கும்பலைச் சேர்ந்தவர்கள் வீட்டிலேயே வெடிகுண்டு தயாரித்து வருவது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. 20-08-2016 அன்று கேரளா கண்ணூர் மாவட்டம் பிஜேபி கட்சியைச் சேர்ந்த தீக்ஷீத் (வயது 23) வீட்டிலேயே வெடிகுண்டை அசெம்பிள் செய்தபொழுது வெடித்துச் சிதறி இறந்தார். 2008லும் இதே போன்று கண்ணூரில் பஜ்ரங்தளைச் சேர்ந்த பியுஸ் மிஸ்ரா மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸைச் சேர்ந்த புபீந்தர் சிங், வீட்டில் வெடிகுண்டை கையாண்டபொழுது வெடித்துச் சிதறி இறந்தனர். காவல் துறை இவர்களது வீட்டில் வெடிக்கப்படாமல் இருந்த 11-க்கும் மேற்பட்ட வெடிகுண்டுகளை பின்னர் கைப்பற்றி இருந்தனர்.
அடுக்கடுக்கான இவ்வளவு சம்பவங்களுக்குப் பிறகு ஜமீன்தார் வீட்டு நாய்கணக்காக ஆர்.எஸ்.எஸ் காலிகள் வலம் வருகின்றனர். ஒரு பிரச்சனையின் முகாந்திரம் வெளியே தெரியும்பொழுதே, அதில் தலையிட்டு காப்பாற்ற வேண்டிய அரசு கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. நீதிமன்றம் இத்தகைய ஆர்.எஸ்.எஸ் ரவுடிகளுக்கு டவுசர் போடாமல் பேண்ட் போட்டு ஊர்வலம் நடத்தலாம் என்று அனுமதி அளிக்கிறது. பிரச்சனை டவுசர் – பேண்டு தான் என்று வழக்காடு மன்றமே ஆர்.எஸ்.எஸ் விசயத்தில் அம்மணமாக நிற்கிறது!
மேலும் தமிழ்நாட்டில் உள்ள தமிழ் தி இந்து, தினமலர், தினமணி போன்ற பார்ப்பன பத்திரிகைகள் உண்மைகளை மறைத்து இந்துத்துவ காலிகளுக்கு போர்வை போர்த்துகின்றனர். இவ்வளவிற்கும் பிறகு ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் தமிழ்நாட்டில் இருப்பது பொதுமக்களுக்கு ஆபத்தானதாகும். இனியும் எங்காவது பெட்ரோல் வெடிகுண்டு, பைப் வெடிகுண்டு நடைபெற்றால் அதற்கு இந்த நீதிமன்றமும் அரசும் தான் காரணம் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறோம்.
இதுவரை, ஆர்.எஸ்.எஸ் கும்பல் ‘ஆடி மாத கூழ் ஊற்றுகிறோம்’, ‘விளக்கு பூஜை நடத்துகிறோம்’, ‘மாரியம்மனுக்கு மாவிளக்கு வைக்கிறோம்’ என்று ஊர்திருவிழாக்களை கைப்பற்றிதான் வெடிகுண்டு கலாச்சாரத்தை இந்த அளவிற்கு வளர்த்து எடுத்து இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டியிருக்கிறது. திருவிழாக்களில் ஒவ்வொரு ஊர்மக்களும் காவிக் கூட்டத்தை அப்புறப்படுத்த வேண்டியது அவசியமாகும். வரவிருக்கும் பூஜை விடுமுறை, மொகரம் பண்டிகைகள் இந்துத்துவக் காலிகளுக்கு மிக வாய்ப்பான ஒன்று. தமிழ்நாட்டில் பேரணியாகச் செல்லும் இவர்கள் பெட்ரோல் மற்றும் பைப் வெடிகுண்டுகள் வைப்பதில் கவனம் செலுத்தவே செய்வர். எனவே மக்கள் மற்றும் இளைஞர்கள் வீதிக்கொரு கமிட்டியை அமைத்து இந்து முன்னணியினர் வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறார்களா என்பதை கண்ணும் கருத்துமாக ஆராய வேண்டும். அரசு தோற்றுப்போன பிறகு, காக்கித்துறை காவித்துறையாக மாறிவிட்ட பிறகு, நம்மை நாமே காத்துக்கொள்வதுதான் நம் முன் இருக்கும் ஒரே வழி!
– தமிழ் வளவன்
செய்தி ஆதாரங்கள் :
- Crude explosives hurled near mosque in Coimbatore
- A report on bomb blast at the house of prominent RSS activist in Nanded, Maharashtra
- Police seize weapons from killed BJP worker’s house
- ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி
- கோபிநாத் பெட்ரோல் குண்டு நாடகம்
Courtesy: vinavu.com