தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் 2 லட்சம் பேர் பாதிப்பு!” – பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி
![](http://www.heronewsonline.com/wp-content/uploads/2018/03/0a1c-37.jpg)
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நடத்திவரும் வேலை நிறுத்தம் குறித்து திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
படப்பிடிப்பு பணிகள் நடக்காததால் 2 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். டிஜிட்டல் கட்டண விவகாரம், திரையரங்கு கட்டண முறை ஆகியவற்றில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகள் நியாயம் தான். ஆனால், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அதை ஏற்றுக்கொள்ளுமா என்பது தெரியவில்லை. அவர்கள் ஈகோ பார்ப்பதாக தெரிகிறது. சரியான முடிவு எடுக்கப்பட வாய்ப்பு இல்லை.
தமிழக அரசு தலையிட்டால் மட்டுமே இப்பிரச்சினையை தீர்க்க முடியும். எனவே, அரசு கண்டிப்பாக இதில் தலையிட்டு நல்ல முடிவு எடுக்க வழிவகை செய்ய வேண்டும். திரைத்துறையை நம்பி இருக்கும் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.