“ஓ.பி.எஸ்ஸா, சசிகலாவா என்பது இருக்கட்டும்; தீபா கூடவே கூடாது!”

காலைல இருந்து தீபா பேட்டி எடுக்க செய்தியாளர்கள் எல்லாம் அவங்க வீட்ல காத்துட்டு இருக்கோம். “தீபா தூங்கிட்டு இருக்காங்க, எழுந்திருக்கலை”னு அப்பப்போ தீபா கணவர் வந்து பதில் சொல்றாரு.

#காலக்கொடுமை!

 TAMILARASI DHANDAPANI

 # # #

தீபா பேட்டி:-

1) சசிகலா முதல்வராக பொறுப்பேற்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்து?

“இப்போதைக்கு எதையும் கூற விரும்பவில்லை.”

2) பன்னீர்செல்வத்தின் செயல்பாட்டுக்கு பின்னால் பா.ஜ.க. இருப்பதாக பேசப்படுகிறதே?

“இதை பற்றி இப்போது கருத்து கூற விரும்பவில்லை. விரைவில் அறிக்கை வெளியிடுவேன்.”

3) ஓ.பி.எஸ்ஸை தற்போது நீங்கள் சந்திக்க செல்வதாக தகவல் வெளியாகி உள்ளதே?

“யூகங்கள், வதந்திகளை நம்ப வேண்டாம். வேறெதும் கூற விரும்பவில்லை.”

4) அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

“24ஆம் தேதி, திட்டமிட்டபடி பணிகள் இருக்கும். அதற்கு முன்னதாக ஏதாவது இருந்தால் தெரிவிக்கப்படும். வேறு எதுவும் இல்லை.”

5) தற்போது அதிமுகவில் ஏற்பட்டுள்ள சூழல், பன்னீர்செல்வம் நீக்கம் குறித்து உங்கள் கருத்து?

“யாரும் எதிர்பாராத நிலை ஏற்பட்டுள்ளது. நானும் செய்திகளை பார்த்து தான் தெரிந்துகொண்டேன். எல்லோருக்கும் அதிர்ச்சி தான். இது குறித்து வேறென்ன கூறுவது என தெரியவில்லை.”

6) உங்களுக்கு ஓ.பி.எஸ். அழைப்பு விடுத்துள்ளாரே?

“என்னை யாரும் நேரடியாக தொடர்புகொள்ளவில்லை. அதையும் நான் செய்திகளில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன். இது குறித்து எதுவும் சொல்ல விரும்பவில்லை. விரிவான அறிக்கை விரைவில் வெளியிடப்படும்.”

#இதுக்கு நம்ம கேப்டன் பேட்டியே பரவாயில்லை மொமண்ட்!

TAMILARASI DHANDAPANI

 # # #

ஓ.பி.எஸ். அழைப்பு பற்றி கருத்து கேட்க சென்ற பத்திரிக்கையாளர்களை ஆறு மணி நேரம் காக்க வைத்து பேட்டி கொடுத்திருக்கிறார் தீபா (பேட்டி எந்த ரகம் என்று கேட்பவர்கள் Tamilarasi Dhandapani பக்கம் சென்று பார்க்கலாம்) .

1999ல் அ.தி.மு.க ஆதரவோடு பா.ஜ.க ஆட்சியிலிருந்த கால கட்டம் தான் நினைவுக்கு வந்தது. அப்போதெல்லாம்  யாராவது ஒரு மத்திய தலைவர் போயஸ் கார்டன் வந்து கொண்டிருப்பார். பத்திரிக்கையாளர்கள் மணிக்கணக்கில் வாசலில் காத்துக் கொண்டிருப்போம்.
அந்த வேலையை இப்போதே தீபா பார்க்க ஆரம்பித்திருக்கிறார்.

அவருக்கு உடல்நிலை சரி இல்லை என்று சிலர் சொல்கிறார்கள். அதை சொல்லி பத்திரிக்கையாளர்களை அனுப்பியிருக்கலாம். ஆறு மணி நேரம் காக்க வைத்து பேட்டி கொடுப்பதெல்லாம் அநியாயம்.

ஓ.பி.எஸ்ஸா, சசிகலாவா என்பது இருக்கட்டும்; தீபா கூடவே கூடாது என்பதில் தெளிவாக இருப்போம்.

KAVITHA MURALIDHARAN