“கமல் பேட்டி என்ன தான் காமெடியாகவே இருந்தாலும் ரொம்ப அதிகம்; முடியல!”

கமல்ஹாசன் சீரியஸ் படம், காமெடி படம் என்று மாறி மாறி எடுப்பார். எனக்கு அவருடைய காமெடி படங்கள்தான் அதிகம் பிடிக்கும். இப்போது அரசியல் கருத்தாளராக சீரியஸாக இருக்கிறாரா, காமெடி செய்கிறாரா என்று புரியவில்லை. ஆனால் ரொம்ப சிரிப்பாக இருக்கிறது.

நரேந்திர மோடி எப்படிப்பட்டவர் என்று தெரியாது என்கிறார் (அவரது நிறை குறைகளை பேசலாம், விமர்சிக்கலாம், பாராட்டலாம்; எப்படிப்பட்டவர் என்று தெரியாது என்றால் அதன் பிறகு என்ன அரசியல் கருத்து உருவாகும்?).

அவர் அல்லது ஒருவர் நல்லவராக இருந்தால் absolute power கூட நல்லது செய்யலாம் என்கிறார் (பிறகு எதற்காக மக்களாட்சி, மன்னாங்கட்டி எல்லாம்?).

இபிஎஸ் என்கிற எடப்பாடி பழனிச்சாமி என்று ஒருவர் இருப்பதே முதல்வராகும் வரை தெரியாது என்கிறார் (ஒரு மக்கள் பிரதிநிதியை, ஒரு அமைச்சரை இவர் யாரென்று கூட தெரிந்துகொள்ளாமல் என்ன அரசியல் கருத்து கூறுகிறார்?). ஆனால் தனி நபர்கள் அரசியலில் ஆழ்ந்த அக்கறை கொள்ள வேண்டும் என்கிறார்.

திரைப்பட நடிகைகள் மீது பாலியல் அவதூறுகள், வன்முறைகள் நடப்பதை பற்றி கேட்டால் பெண்ணை வைத்து சூதாடிய மகாபாரதத்தை படிக்கும் நாடு இது என்று சொல்கிறார் (இது ஏன் அபத்தம் என்பதற்குக் கூட விளக்கம் தேவைப்படுபவர்கள் என் திரிகளை வாசிக்காதீர்கள்).

திராவிடம் என்பது புவியியல் அடையாளம் ஆனால் இனமானம் சார்ந்தது என்று சொல்கிறார் (இது எப்படிப்பட்ட அபத்தம் என்பதற்கும் விளக்கம் தேவையில்லை),

என்னதான் காமெடியாகவே இருந்தாலும் ரொம்ப அதிகம். முடியல.

RAJAN KURAI KRISHNAN