பிரியாணி என்பது வெறும் பிரியாணி அல்ல!

டைம் லைன் முழுக்க பிரியாணி பற்றிய பதிவுகள். இஸ்லாமியர் அல்லாதவர்கள் இஸ்லாமியர்களிடம் உரிமையாக பிரியாணியை கோரும் வாசகங்கள். அதை ஏதோ வெறும் உணவுக்கான கோரிக்கை என்று புரிந்துகொண்டால் அதைவிட முட்டாள்தனம் வேறில்லை. இஸ்லாமியர் அல்லாதவர்கள் இஸ்லாமியர்களுடன் உணர்வு பூர்வமாகவும் உரிமையாகவும் இந்தப் பண்டிகையில் இணைந்து நிற்கிறார்கள். அவ்வளவு வாழ்த்துக்கள்  அவர்களிடமிருந்து குவிந்து கொண்டிருக்கின்றன.

0a1c

மதவாத சக்திகள் ஏற்படுத்த விரும்பும் வேற்றுமை உணர்வுகளை இங்கு விதைக்க முடியாது என்பதை பெரியாரின் பிறந்த தினம் மட்டுமல்ல, ரம்ஜான், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளும் தொடர்ந்து நிரூபிக்கின்றன.

தமிழர்களை இணைக்கும் மதம் கடந்த பண்பாட்டு வெளி ஒன்று இருக்கிறது. அது எல்லா பண்டிகைகளையும் தமிழர் பண்டிகையாக உள்ளிழுத்துக் கொள்ளும்.

தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் தனிமைப்படுவதை இந்துக்களோ, கிறிஸ்துவர்களோ ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.

பிரியாணி என்பது வெறும் பிரியாணி அல்ல.

 மனுஷ்ய புத்திரன்