‘ராமராஜ்யம்’ என்பது கிட்டத்தட்ட அறிவிக்கப்பட்டு விட்டது!
ராமராஜ்யம் என்பது கிட்டத்தட்ட அறிவிக்கப்பட்டுவிட்டது. முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் வாக்குரிமையை மறுக்கும், காசியை தலைமை இடமாகக் கொண்ட, 790 பக்கங்கள் கொண்ட புதிய அரசியலமைப்பு வரைவை சங்பரிவார் அமைப்புகள் வெளியிட்டு விட்டன.
ராணுவத்தை ஆர்எஸ்எஸ் மயமாக்குவது அல்லது ஆர்எஸ்எஸ்-ஐ ராணுவ மயமாக்குவது என்பது நம் கண்முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
ஏற்கனவே ராணுவப் பயிற்சி பள்ளியை ஆர்எஸ்எஸ் துவங்கியாச்சு. பள்ளிக்கூடங்களில் சாதி அடையாள கயிறு தடை சுற்றறிக்கை ஒரே நாளில் திரும்ப பெறப்பட்டு விட்டது
புதிய கல்விக் கொள்கை வளர்த்தெடுக்கப் போகும் குழந்தைகளுக்கு அ என்றால் அம்மா கிடையாது அகஸ்தியர் தான். ஜிஎஸ்டி என்பது நேப்கினுக்கு விதிக்கப்படும் வரி பிரச்சனையாக கூச்சலிட்டு அது மாநில அரசுகளை பஞ்சாயத்து போர்டுகளாக மாற்றும் என்ற வாதம் அடிபட்டுப் போனது
காஷ்மீரை இணைத்து விட்டார்கள். அகண்ட பாரதத்தின் ஒரு பகுதி அவர்களைப் பொறுத்தவரை மீட்கப்பட்டு விட்டது. காஷ்மீரி பற்றி இனி நடக்கும் ஜனநாயக உரையாடல்கள் அத்தனையும் அவர்களைப் பொறுத்தவரை பிரிவினைவாத கருத்துக்களே,
காஷ்மீருக்கு அடுத்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம், பூடான், திபெத், பர்மா வரைக்கும் ராம ராஜ்யத்தின் நிலம் இருப்பதாகவும், அதை மீட்கப்பட இருப்பதாகவும் whatsapp வீடியோக்கள் வர ஆரம்பித்தாயிற்று.
நிலமும், நில மீட்பும் ஆதிமனிதனின் உளவியலோடு சம்பந்தப்பட்டது. எவ்வளவு அரசியல் பட்ட ஜனநாயகப் மனிதனுக்கும் இந்தக் கிளர்ச்சி உண்டு.
ஆர்எஸ்எஸின் இந்த அசுரத்தனமான கிளர்ச்சியூட்டும் பிரச்சார பொறிமுறைகளுக்கு நடுவே மூழ்கிக் கொண்டிருக்கும் இந்திய பொருளாதாரம் பற்றியோ வேலையில்லாத் திண்டாட்டம் பற்றியோ உரையாடல் நிகழ் போவதில்லை.
ஆர்எஸ்எஸ் மேனிபெஸ்டோ வெளியிடப்பட்டபோது சிரித்த காங்கிரஸ் இப்போது அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறது. ராமராஜ்யம் என்பது ஏற்கனவே இருக்கும் அரசியலமைப்பிற்கு உள்ளாகவே நடக்கத் தொடங்கிவிட்டது.
10 சதவீத இட ஒதுக்கீடு மூலம் ஏற்கனவே இருக்கும் உயர்பதவிகளை மேலும் உறுதிப்படுத்திக் கொண்டு விட்டார்கள்.
சந்தேகமே இல்லாமல் இது ஆரிய அரசுதான். இது இங்கிருக்கும் அத்தனை இஸங்களுக்கும் எதிரானது. கம்யூனிசமோ, அம்பேத்கரியமோ, திராவிடமுமோ, தமிழ் தேசியமோ ஒன்றுக்கொன்று இணைந்து நிற்க வேண்டியது இன்றைய வரலாற்றுத் தேவை.
Anbe Selva