தனுஷ் தயாரிக்கும் ரஜினி படத்தின் டைட்டில்: நாளை காலை வெளியாகிறது

பா.ரஞ்சித் இயக்கும் ரஜினியின் புதுப் படத்தின் தலைப்பு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அப்படத்தை தயாரிக்கும் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
‘கபாலி’ வெற்றிப்படத்தை அடுத்து ரஜினிகாந்த், ஷங்கர் இயக்கத்தில் ‘எந்திரன்’ இரண்டாம் பாகமான ‘2.0’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட பணிகள் முடிந்துவிட்டதால், இதையடுத்து அவர் தனுஷின் சொந்த நிறுவனமான வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். ‘கபாலி’ இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 28ஆம் தேதி மும்பையில் துவங்க இருக்கிறது.
இந்நிலையில், ரஜினியின் 164-வது படமான இப்படத்தின் தலைப்பு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று இதன் தயாரிப்பாளர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.