“ஜோக்கர்’ அருமையான படம்”: ரஜினிகாந்த் பாராட்டு!

‘குக்கூ’ பட இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘ஜோக்கர்’. ‘ஆரண்ய காண்டம்’, ‘ஜிகர்தண்டா’ போன்ற படங்களில் நடித்த குரு சோமசுந்தரம் கதாநாயகனாக நடித்துள்ளார். காயத்ரி கிருஷ்ணா, ரம்யா பாண்டியன், மு.ராமசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்த இப்படத்துக்கு செழியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
‘ஜோக்கர்’ படம் பார்த்த நடிகர் தனுஷ் மனம் நெகிழ்ந்து கண் கலங்கினார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறும்போது, “ஜோக்கர் படம் பார்த்தேன். இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் இவர்களில் யாரை பாராட்டுவது என்றே தெரியவில்லை. கண்களில் கண்ணீர். தயவுசெய்து பாருங்கள். நன்றி” என்று தெரிவித்திருந்தார்.
தற்போது நடிகர் ரஜினிகாந்த் ‘ஜோக்கர்’ படம் பார்த்து பாராட்டியுள்ளார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ஜோக்கர் படத்தின் குழுவை பாராட்டுகிறேன். அருமையான படம்” என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். இதனால் ‘ஜோக்கர்’ படக்குழு மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறது.