ரஜினிக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கிறது…

ரஜினிக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கிறது. தன்னுடைய மொழி, தன்னுடைய இனம், தன்னுடைய பண்பாட்டை விட பார்ப்பனிய பண்பாடு தான் சிறந்தது, சமஸ்கிருத மொழி தான் மூலமானது, அவர்கள் தான் அறிவுக்குடி என்று மனதார நம்புகிறார், இமயமலை, ரிஷிகள், பாரத புராணக் கதைகள், அவர்கள் காட்டும் கடவுள்கள் தான் சூப்பர் பவர் என்று நம்புகிறார்..

பார்ப்பனப் பண்பாடை விட நம்முடைய பண்பாடு எவ்விதத்திலும் சளைத்தது அல்ல, சொல்லப்போனால் அவர்களைவிட நாம்தான் மூலமானவர்கள், நம்முடைய மொழி தான் சமஸ்கிருதத்தை விட மூலமானது என்று அவருடைய மராத்திய இனத்திலும் சொல்லித் தரப்படவில்லை. அவர் பிறந்த கன்னட நாட்டிலும் அவருக்கு சொல்லித் தரப்படவில்லை. ஆனால் அவர் வாழும் தமிழகத்தில் அது பற்றி வண்டி வண்டியாக சொல்லப்பட்டிருக்கிறது அது எதுவும் அவருடைய காதுகளில் ஏறவே இல்லை, அல்லது சந்தையை புரிந்துகொண்டு சர்வைவலுக்காக பார்ப்பன சாய்வை தேர்ந்தெடுத்து இருக்கலாம் ஆனால் மனதார சாஷ்டாங்கமாக காலில் விழுவதற்கு எல்லாம் உளமாற அவர் பார்ப்பனிய பண்பாட்டை தன்னைவிட உயர்ந்ததாக எண்ணிக் கொள்ளும் தாழ்வு மனப்பான்மையாளராக இருந்தால் மட்டுமே முடியும்..

பாவம், அவர் நீண்ட காலமாக வாழும் தமிழ்நாட்டில் தான் பார்ப்பன பண்பாட்டை அடித்து நொறுக்கி, அவர்களை விட மொழியிலும் பண்பாட்டிலும் அறிவிலும் இம்மண்ணின் பூர்வகுடிகள் சிறந்தவர்கள், மூலமானவர்கள் என்று நிரூபித்துக் காட்டிய பல ஆளுமைகள் வாழ்ந்திருக்கிறார்கள், அந்த அறிவை ஊன்றுகோலாக உள்வாங்கிக் கொண்டு உளவியலாக சுயமரியாதை பெற்ற மனிதராக உணர முடியாத மிக பரிதாபகரமான ஆளாகவே ரஜினி இருக்கிறார்…

ANBE SELVA