போராடும் மக்களுக்கு எதிராக கொடூர வலதுசாரி கருத்தியலாளர் ரஜினி ட்வீட்!

இந்திய ஒன்றிய சங்கியரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராடுகிற மாணவர்கள் உள்ளிட்ட வெகுமக்கள் வன்முறையில் ஈடுபடுவதாகவும், அது தமக்கு வேதனை அளிப்பதாகவும் கொடூர வலதுசாரி கருத்தியலாளரும், கர்நாடக மராட்டியருமான நடிகர் ரஜினி கூறியுள்ளார். இது தொடர்பான அவரது ட்வீட் வருமாறு:-

“எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக் கூடாது. தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது.”