“அரசியலில் இறங்குவதற்கான அவசரம் தற்போது இல்லை!” – ரஜினிகாந்த்

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள பிரபல வழிபாட்டுத் தலமான மந்திராலயம் சென்று ராகவேந்திரரை வழிபட்ட ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில் ரஜினியை செய்தியாளர்கள் சந்தித்தனர்.
“அரசியல் களத்தில் எப்போது இறங்கப் போகிறீர்கள்?” என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த ரஜினி, “அரசியலில் இறங்குவதற்கான அவசரம் தற்போது இல்லை”என்றார்.
“ரசிகர்களை எப்போது சந்திக்க இருக்கிறீர்கள்?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, “என் பிறந்தநாளுக்குப் பிறகு ரசிகர்களை மீண்டும் சந்திப்பேன்” என்றார் ரஜினி.
ரஜினிகாந்த் நடிப்பில் ‘2 பாயிண்ட் ஓ’, ‘காலா’ ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.