சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் பெயர் ‘அண்ணாத்த’: அதிகாரபூர்வ அறிவிப்பு
![](http://www.heronewsonline.com/wp-content/uploads/2020/02/0a1e.jpg)
’தர்பார்’ படத்தை அடுத்து ரஜினிகாந்த் தற்போது நடித்துவரும் அவரது 168-வது படத்துக்கு ‘அண்ணாத்த’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இத்தகவலை இன்று மாலை அதிகாரபூர்வமாக அறிவித்தது.
‘அண்ணாத்த’ படத்தை ’விஸ்வாசம்’ பட இயக்குநர் சிவா இயக்குகிறார். இந்த படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.
டி.இமான் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.