“குருக்கள் வர்றார், வழி விடுங்கோ” என கூவ கோவையில் தரகர் தமிழருவி மணியன் மாநாடு!

ஒரு பார்ப்பன அர்ச்சகர் நடந்துவர, அவரது கையாள், “குருக்கள் வர்றார்… வழி விடுங்கோ…” என கூவிக்கொண்டே வருவது, தமிழ் திரைப்படம் ஒன்றில் இடம் பெற்ற காமெடி காட்சி. அதுபோல், அரசியல் கட்சி தொடங்க இருக்கும் நடிகர் ரஜினிகாந்தை, முதலமைச்சர் வேட்பாளராக முன்னறிவிப்பதற்காக, அரசியல் தரகரும், காந்திய (?) மக்கள் இயக்கத் தலைவருமான தமிழருவி மணியன், ரஜினி ரசிகர்களைக் கூட்டி, கோவையில் மாநாடு ஒன்றை நடத்த இருக்கிறார்.

கோவை கொடீசியா மைதானத்தில், வருகிற மே மாதம் 20ஆம் தேதி நடைபெற இருக்கும் இம்மாநாட்டுக்கு, ‘முதல்வராக ரஜினியை முன்னிறுத்தும் காந்திய மக்கள் இயக்க மாற்று அரசியல் மாநாடு’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

“நான் அரசியலுக்கு வருவது உறுதி” என்று ரஜினி கடந்த டிசம்பர் 31ஆம் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்தார். ஆனால், அதற்கு முன்பாகவே, கடந்த ஆகஸ்டு 20ஆம் தேதி, ரஜினி அரசியலுக்கு வருவதை முன்னறிவிக்கும் வகையில், ‘ரஜினியின் அரசியல் பிரவேசம் ஏன் அவசியம்?’ என்ற பெயரில் திருச்சியில் காந்திய (?) மக்கள் இயக்கம் சார்பில் ரஜினி ரசிகர்களைத் திரட்டி மாநாடு நடத்தினார் தமிழருவி மணியன்.

தற்போது ரஜினியை முதல்வர் வேட்பாளராக முன்னறிவிப்பதற்காக கோவையில் மாநாடு நடத்த இருக்கிறார் தமிழருவி மணியன்.

அர்ச்சகர் மீதுள்ள எரிச்சலை விட, “குருக்கள் வர்றார்… வழி விடுங்கோ…” என கூலிக்கு கூவும் தரகர் மீது தான் பயங்கர எரிச்சலில் இருக்கிறார்கள் பெரும்பாலான தமிழக வாக்காளர்கள்!