‘மெர்சல்’ பற்றி கருத்து தெரிவித்தார் ரஜினி: பாஜக எதிர்ப்பு பற்றி கப்சிப்!

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்துக்கு தமிழக பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழ் திரையுலகைச் சேர்ந்த 99 சதவிகிதத்தினர் அப்படத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனால், நடிகர் ரஜினிகாந்த் மட்டும் கருத்து எதும் கூறாமல் மவுனம் சாதித்து வந்தார்.

இதற்காக சமூக வலைத்தளங்களில் ரஜினிக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பா.ஜ.க.வின் கோபத்துக்கு ஆளாகக் கூடும் என்று ரஜினி அஞ்சுவதாக பலரும் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், ஒருவழியாக ரஜினி இன்று ‘மெர்சல்’ படம் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். “மெர்சல் படம் முக்கியமான பிரச்சனை பற்றி பேசியிருக்கிறது. வெல் டன். படக்குழுவுக்கு என் வாழ்த்துக்கள்” என்று அவர் கூறியுள்ளார்.

மருத்துவத் துறை சீர்கேடு பற்றிய பிரச்சனையை பேசியதற்காக ‘மெர்சல்’ படத்தை பாராட்டியிருக்கும் ரஜினி, சில காட்சிகளை நீக்க வேண்டும் என பாஜக தலைவர்கள் அராஜகமாய் பேசி வருவது பற்றி எதுவும் சொல்லவில்லை என்பது கவனிக்கத் தக்கது.

0a1e