“ரஜினி சார் எனக்கு கொடுத்த அட்வைஸ்”: ‘ராஜவம்சம்’ பத்திரிகையாளர் சந்திப்பில் சசிகுமார் பேச்சு

செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டிடி.ராஜா தயாரித்துள்ள ”ராஜவம்சம்” படத்தை அறிமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் கதாநாயகனாக இயக்குனர் /நடிகர் சசிகுமார் நடிக்க  இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரு அறிமுக இயக்குனர் 49 நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ளது இதுவே முதன்முறை. நட்சத்திர பட்டாளங்களுடன் ஜனரஞ்சகமான படங்களை இயக்குவதில் புகழ்பெற்றவர் இயக்குனர் சுந்தர் C. அவரிடம் உதவி இயக்குனராக பயிற்சி பெற்றவர்தான் கதிர்வேலு .

இந்த படத்தில் ராதாரவி, தம்பி ராமைய்யா, விஜயகுமார், சதிஷ், மனோபாலா, ரமேஷ் கண்ணா, சிங்கம் புலி, யோகி பாபு, கும்கி அஸ்வின், ஆடம்ஸ், சரவணா சக்திமணி சிலம்பம் சேதுபதி, ரமணி, ராஜ் கபூர், தாஸ், நமோ நாராயணன், சுந்தர், சாம்ஸ் , சமர் , ரேகா,சுமித்ரா , நிரோஷா ,சந்தான லட்சுமி  ,சசிகலா ,யமுனா ,மணி சந்தனா ,மணி மேகலை,மீரா ,லாவண்யா ,ரஞ்சனா,,ரஞ்சிதா ,ரம்யா ,தீபா என 49  கலைஞர்கள்  நடித்துள்ளனர் .

சித்தார்த் ஒளிப்பதிவு செய்ய, சாம்.சி.எஸ்  இசை அமைத்துள்ளார் .கலை இயக்கம் – சுரேஷ். படத்தொகுப்பினை சாபு  ஜோசப் மேற்கொண்டுள்ளார் . நவம்பர் 26ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் இப்படத்தின் பத்திரிகையாள்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

9

இந்நிகழ்வில் கலந்துகொண்டோர் பேசிய பேச்சு விவரம்:

நடிகர் சசிகுமார்:

இந்த கூட்டுக்குடும்பம் சம்பந்தப்பட்ட படத்தை கதிர் என்னிடம் கூறினார். மிகவும் பிடித்திருந்தது. நானும் கூட்டு குடும்பத்தில் வாழ்ந்து இருக்கிறேன் ,வாழ்ந்துகொண்டு இருக்கிறேன். இப்படத்தில் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் சித்தார்த் அனைவரையும் அழகாக கேமராவில் காட்டியுள்ளார். எடிட்டர் சாபு ஜோசப் இப்படத்தில் பணிபுரிந்ததில் மகிழ்ச்சி. சாம் சி எஸ் பின்னணி இசை மிகப்பெரிய பலம். இப்படத்திற்கு இன்னொரு மிகப்பெரிய பலம் தயாரிப்பாளர் டி டி ராஜா சார். ரஜினி சார் பேட்ட படத்தில் எனக்கு ஒரு அட்வைஸ் கொடுத்தார். படத்தை தயாரிக்க மட்டும் வேண்டாம் என்றார். எதற்கு சொல்கிறேன் என்றால் அதில் அவ்வளவு சிரமமும் பொறுமையும் திறமை வேண்டும். டி டி ராஜா சாருக்கு நன்றி. முதல்முறையாக நடிகர் சதீஷ் உடன் இணைந்து படத்தில் நடிப்பது மகிழ்ச்சி.

நடிகர் சதீஷ்:

இப்படத்தில் நடித்ததில் மிகவும் மகிழ்ச்சி .இவ்வளவு நடிகர்களுடன் நடித்ததில் மிகப்பெரிய அனுபவம். படப்பிடிப்பு தளமே மிகவும் கலகலப்பாக இருக்கும். இப்படத்தில் அவ்வளவு நடிகர்கள் நடித்துள்ளனர். கேரவன்கள்  தட்டுப்பாடு கூட ஏற்பட்டிருக்கிறது. இயக்குனர் கதிர் அதை சிறப்பாக கையாண்டுள்ளார். தயாரிப்பாளர் டி டி ராஜா சார் போன்ற பல தயாரிப்பாளர் வரவேண்டும் .இந்த மாதிரியான அருமையான படங்களை தயாரிக்க வேண்டும்

இயக்குனர்  கதிர்:

படங்களை மக்களுக்கு விரைவில் கொண்டு போய் சேர்க்கும் மீடியா நண்பர்களுக்கு நன்றி. இந்த காலத்தில் உறவுகளையும் உணர்வுகளையும்  மறந்து ஓடிக் கொண்டிருக்கிறோம். உறவுகளை ஞாபகப்படுத்தும் படமாக இது இருக்கும் அனைத்து வயது மக்களையும் இப்படம் கவரும். நவம்பர் 26 ஆம் தேதி இப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகிறது.

தயாரிப்பாளர் டி டி ராஜா:

தமிழ் சினிமாவில் கூட்டுக்குடும்பம் சம்பந்தப்பட்ட நிறைய வந்துள்ளது .எப்பொழுதும் போல் சண்டை ,பிரச்சனை ,இறுதியில் ஒன்று சேர்வது போல் இல்லாமல் இப்படம் வித்தியாசமாக இருக்கும். இப்படம் கலகலப்பாக போகும். ஒரு ஜனரஞ்சகமான காமெடி திரைப்படம். எல்லோருக்கும் படம் கண்டிப்பாக பிடிக்கும்.

எடிட்டர் சாபு ஜோசப்:

இந்தப்படத்தில் நான் பணிபுரிய முக்கிய காரணம் கதிர். நாங்கள் பல ஆண்டு நண்பர்கள். இப்படத்தை எடிட் செய்தது புதிய அனுபவம். ஒரு சீன் எடுத்துக்கொண்டால் அதில் எல்லோருக்கும் வசனம் இருக்கும் .அதை ட்ரிம் பண்ணி கொண்டு வந்தது எனக்கு சவாலாக இருந்தது .இப்படத்தில் சசிகுமார் சார் ஒரு IT பையனாக ஸ்டைலாக இருக்கிறார். நிக்கி கல்ராணியின் முதல் படத்தில் நான் எடிட்டராக பணிபுரிந்து இருக்கிறேன் .இது இரண்டாவது படம். இப்படத்தில் நடித்த எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள்

நடிகை ரேகா:

நான் கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்து இருக்கிறேன். ஆனால் தலைமுறைகள் மாற மாற அந்த கூட்டுக்குடும்பம் சிறிதாக மாறும் .இந்த ஒரு சூழ்நிலையில்தான் இப்படத்தில் நான் நடித்தேன்.40 நடிகர்களை வைத்து படம் இயக்குவது சாதாரண விஷயம் அல்ல இயக்குனர் கதிர் அதை சிறப்பாக கையாண்டு உள்ளார். கண்டிப்பாக இப்படம் உறவுகளை மேம்படுத்தும்.

நடிகை நிக்கி கல்ராணி:

ராஜ வம்சம் படத்தில் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது .நான் கூட்டுக் குடும்பத்தில் வாழும் வாழ்க்கை கிடைக்கவில்லை . ஆனால் இப்படத்தில் ஒரு பெரிய வீட்டில் உண்மையாகவே ஒரு கூட்டு குடும்பம் போல் வாழ்ந்தது போல் இருக்கிறது. நடிகர் சசிகுமார் நடிப்பின் மூலம் பல அனுபவங்களை கற்றுக் கொடுத்தார் .இயக்குனர் கதிர் சுந்தர் சி யின் உதவியாளர். மிக அருமையாக இப்படத்தை இயக்கியுள்ளார் .இப்படத்தை தியேட்டரில் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என கதிர் பிடிவாதமாக இருந்தார் .அப்பொழுதுதான் இந்த கூட்டு குடும்பம் சம்பந்தப்பட்ட படத்தை குடும்பம் குடும்பமாக மக்கள் ரசிப்பார்கள் என எண்ணினார். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் .