கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு: பிரபல பின்னணி பாடகி பவதாரணி மரணம்

பிரபல திரைப்பட பின்னணிப் பாடகியும், இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரணி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 47.

கல்லீரல் புற்றுநோய் காரணமாக பவதாரணி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நோய்க்கு சிகிச்சை பெற இலங்கை சென்ற பவதாரணி, அங்கு ஆயுர்வேத சிகிச்சை எடுத்துவந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சுமார் 30க்கும் மேற்பட்ட படங்களில் பல பாடல்களைப் பாடி பிரபலமானவர் பவதாரணி.  பின்னணிப் பாடகியாக மட்டும் அல்லாமல், 10 படங்களுக்கு இசையும் அமைத்துள்ளார். இசையமைப்பாளர்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகியோரின் சகோதரியான அவருக்கு, இளையராஜா இசையில் ’பாரதி’ படத்தில் பாடிய ”மயில்போல பொண்ணு ஒண்ணு…” என துவங்கும் பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகிக்கான ஒன்றிய அரசு விருது கிடைத்தது.

பவதாரிணியின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.