ரயிலில் பயணிக்கும் பெண்கள் தற்காப்புக்காக கத்தி வைத்துக்கொள்ள அனுமதி!
பெண்கள் மீதான பாலியல் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலில், டெல்லியில் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பெண்கள், தங்கள் தற்காப்புக்காக கத்தி எடுத்துச் செல்ல மத்திய பாதுகாப்பு படை அனுமதி வழங்கியுள்ளது.
இது குறித்து மூத்த அதிகாரி கூறும்போது, “டெல்லியில் மெட்ரோ ரயில் பயணங்களின்போது பெண்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு கத்தி கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நான்கு அங்குலத்துக்கு குறைவான நீளம் கொண்ட கத்திகளை பெண்கள் வைத்துக் கொள்ளலாம்” என்று கூறினார்.
அதுபோல், மெட்ரோ ரயில் பயணிகள் தீப்பெட்டி, லைட்டர் கொண்டுச் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு பயணி ஒரே ஒரு தீப்பெட்டிதான் வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது..
முன்னதாக மெட்ரோ ரயில்களில் சில பொருட்களால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாக அவற்றை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பெண்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு சில பொருட்களுக்கு மத்திய பாதுகாப்பு படையினர் தற்போது விலக்கு அளித்துள்ளனர்.