பெரியார் சிலையை சேதப்படுத்திய பாஜக பயங்கரவாதிகளை கட்டி வைத்து உதைத்த பொதுமக்கள்!`

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் எதிரே உள்ள தந்தை பெரியார் சிலையை இன்று இரவு சேதப்படுத்திய பாஜக பயங்கரவாதிகள் இருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து, கட்டி வைத்து உதைத்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பெரியார் சிலையை சேதப்படுத்திய பாஜக நகர செயலாளர் முத்துராமன், பிரசன்னா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த பாஜக பயங்கரவாதிகள் பயன்படுத்திய இரு சக்கர மோட்டார் வாகனத்தையும் பொதுமக்கள் சிறைப் பிடித்து வைத்திருந்தனர். “நகர செயலாளர் முத்துராமன்” என்ற பெயரும், பாஜகவின் தாமரை சின்னமும் ஒட்டப்பட்டிருந்த இந்த வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

0a1g

பெரியார் சிலைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில், 25 ஆண்டுகாலமாக ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தோற்கடித்து பாஜக கூட்டணி ஆட்சியை பிடித்தது. அங்கு ஆட்சியை பிடித்த சில மணி நேரங்களிலே பெலோனியா நகரில் இருந்த புரட்சியாளர் லெனினின் சிலையை பாஜக பயங்கரவாதிகள் ஜேசிபி இயந்திரம் கொண்டு தகர்த்து வீழ்த்தினார்கள்.

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், ஆரிய இன வெறியனும், பார்ப்பன கழிசடையும், பாஜக பயங்கரவாதியுமான எச்.ராஜா சர்மா, “இன்று திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வே.ராமசாமி சிலை” என திமிராய் பதிவிட்டிருந்தது.

தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் நோக்கத்துடன் இந்த பாஜக பயங்கரவாதி இப்படி கூறியிருப்பதற்கு மு.க.ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன், சீமான், டிடிவி.தினகரன், கி.வீரமணி, குளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன், சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் தந்தை பெரியார் சிலையை பாஜக பயங்கரவாதிகள் சேதப்படுத்தி, பொதுமக்களிடம் சிக்கி தர்ம அடி வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.