இணையத்தில் ‘ஜோக்கர்’ பார்த்தவர் ரூ.500 வங்கியில் செலுத்தினார்!

“மக்கள் ஜனாதிபதி’ மன்னர் மன்னன் உத்தரவு” என்ற பெயரில் ‘ஜோக்கர்’ படக்குழு ஓர் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதில், “தோழர்களே! திருட்டு விசிடியில், இணைய தரவிறக்கத்தில் படம் பார்ப்பதும் ஊழலின் – சுரண்டலின் இன்னொரு அங்கம் தான். ஒரு சினிமா பலநூறு தொழிலாளர்களின் வியர்வை, சில வருட உழைப்பு. இதையும் தாண்டி திருட்டு விசிடியில் படம் பார்க்கும் தோழர்கள், அதற்கான நியாயமான தொகையை கீழ்க்கண்ட வங்கி கணக்கில் செலுத்திவிடுங்கள். திஸ் இஸ் மை ஆர்டர். நீங்கள் அனுப்புகிற பணம், இந்த தேசத்தில் கழிவறை இல்லாத குடிமக்களுக்கு கழிவறை கட்டித்தர பயன்படுத்தப்படும்” என்று கூறியிருந்ததோடு, பட தயாரிப்பு நிறுவனத்தின் வங்கி கணக்கு சம்பந்தப்பட்ட விவரங்களையும் வெளியிட்டிருந்தது.
இந்த அறிவிப்பை பார்த்த சிலம்பரசன் என்பவர், இணையத்தில் ‘ஜோக்கர்’ படம் பார்த்ததற்காக வருத்தம் தெரிவித்ததோடு, பட நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் ரூ.500 செலுத்தியுள்ளார்.