மயில் எப்படி கர்ப்பம் தரிக்கிறது?: உயர் நீதிமன்ற பார்ப்பன நீதிபதி தெரிவித்த கருத்தால் சர்ச்சை!
மயில் எப்படி கர்ப்பம் தரிக்கிறது, மயில் ஏன் இந்தியாவின் தேசியப் பறவையாக இருக்கிறது என்பது குறித்து ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர சர்மா செய்தியாளர்களிடம் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர சர்மா, பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று மோடி அரசுக்கு பரிந்துரை செய்து ஒரு தீர்ப்பு வழங்கினார். மேலும், பசுவை கொல்பவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை என்பதை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்றும் அவர் பரிந்துரை செய்தார். பணி ஓய்வு பெறும் கடைசி நாளில் அவர் இத்தகைய தீர்ப்பை வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஆண் மயில் பிரம்மச்சர்யத்தை பின்பற்றும் பறவை. அது ஒருபோதும் தன் இணையுடன் உறவு கொள்வதில்லை. ஆண் மயிலின் கண்ணீரைப் பருகியே பெண் மயில் கர்ப்பம் தரிக்கிறது.
“மயிலின் இந்த புனிதத் தன்மையால் தான் ஸ்ரீகிருஷ்ணர் மயிலிறகை தனது தலையில் சூடிக்கொண்டிருக்கிறார். இத்தகைய புனிதத் தன்மையால்தான் மயில் நம் நாட்டின் தேசியப் பறவையாக இருக்கிறது. இதேபோல் பசுவுக்கும் பல தெய்வீக குணங்கள் இருக்கின்றன. அதனால் பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்” என்றார்.
மயில் எப்படி கர்ப்பம் தரிக்கிறது என்பது குறித்து அவர் தெரிவித்த கருத்து பலத்த சர்ச்சைக்கும், கடும் கண்டனத்துக்கும், நகையாடலுக்கும் உள்ளாகி வருகிறது. அவரது கருத்தை மறுக்கும் விதமாக சமூக வலைத்தள பதிவர்கள் பலரும் மயில் உடலுறவு கொள்ளும் காணொளியை பதிவிட்டு வருகிறார்கள்.
ஓய்வு பெறும் நீதிபதி ஒருவருக்கு மயில் எப்படி கர்ப்பம் தரிக்கிறது என்ற அடிப்படை அறிவியல் கூட எப்படித் தெரியாமல் இருக்கிறது என சமூக வலைதளங்களில் அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மயில் உடலுறவு கொள்ளும் வீடியோ: