மிஷ்கின், ராம் பாராட்டிய ‘பட்டாம்பூச்சிகளின் வாக்குமூலம்’ – முழு குறும்படம்
மது சிந்தனையைக் கொல்லும். சில தருணங்களில் உயிரையும் கொல்லும்.
தங்களின் கண் முன்னே அம்மா இறப்பதைக் காணும் குழந்தைகளின் மனநிலையையும், அவர்களின் எண்ண ஓட்டதையையும், மன உளைச்சலையும் பேசுபொருளாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள குறும்படம் ‘பட்டாம்பூச்சிகளின் வாக்குமூலம்’
இது ஆனந்தவிகடனின் “சொல்வனம்” பகுதியில் வெளிவந்த கவிஞர் சூ.சிவராமனின் “அவனின் குழந்தைகள்” என்ற கவிதையினை கருவாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பாண்டியன் நன்மாறன், பேபி பிரசன்னா, பேபி ஈஸ்வரி, சுமித்ரா ராஜேந்திரன் நடித்துள்ளனர். புஷ்பநாதன் ஆறுமுகம் இயக்கியுள்ளார். இவர் சென்னையிலுள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
பிரபு வெங்கடாசலம், ராம், ஏ.ஆனந்த், புஷ்பநாதன் ஆகியோர் தயாரித்துள்ளனர். கேபிள் சங்கர் entertainment மூலமாக இது வெளியிடப்பட்டுள்ளது.
குழந்தைகள் பேசும் கண்ணாடி பிம்மங்கள். அவர்களைச் சுற்றி நடக்கிற நிகழ்வுகளையே தங்களின் வாழ்க்கையாக வளர்த்து கொள்கிறார்கள். இக்குறும்படம் குழந்தைகளின் உலகத்தை பார்வையாளர்களின் கண் முன்னே காட்டும்.
இக்குறும்படமானது மதுரையில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டது. 2015ஆம் ஆண்டு சென்னையில் “This & That” திரைப்பட விழாவில் கலந்துகொண்டு, இயக்குனர்கள் மிஷ்கின், ராம் ஆகியோரின் பாராட்டைப் பெற்றது.
ஆகோ ஸ்டுடியோஸ் இதற்கு முன்பாக “கனவுகள் விற்பவன்”, “முதிர்க்கன்னி”, சென்னை பேச்சலர்ஸ் சாங் போன்ற படைப்புகளை வெளியிட்டுள்ளது.
ஒளிப்பதிவு – கார்த்திக் பாஸ்கர்
எடிட்டிங் – வினோத் குமரன்
இசை – கெயின் W சித்தார்த்
கதை – கவிஞர் சூ. சிவராமன்
இசை கோர்ப்பு – டோனி பிரிட்டோ
https://youtu.be/Jtr0PVg7LkE