முழுமையான காதல் கதையாக உருவாகிறது ‘பார்த்திபன் காதல்’

எஸ் சினிமா கம்பெனி என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘பார்த்திபன் காதல்’. இந்த படத்தில் யோகி கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக வர்ஷிதா அறிமுகமாகிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
கதை எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் வள்ளிமுத்து. இவர் ‘என்னமோ நடக்குது’, ‘அச்சமின்றி’ போன்ற படங்களை இயக்கிய பி.ராஜபாண்டியிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.
‘பார்த்திபன் காதல்’ பற்றி இயக்குனர் வள்ளிமுத்து கூறுகையில், “இது உண்மை சம்பவத்தை மையப்படுத்தி புதிய களத்தில் இளமை கொஞ்சும் காதல் கதையாக உருவாக இருக்கிறது. அறிமுக நாயகன் யோகி ஓவிய கல்லூரி மாணவனாக நடிக்கிறார். இளம் கதாநாயகி வர்ஷிதா கிராமத்து கல்லூரி மாணவியாக நடிக்கிறார். சமீபகாலமாக தமிழ் சினிமாவில் காமெடி பேய் படங்களும், ஆக்ஷன் படங்களும் வந்து கொண்டிருக்கும் இந்த சூழலில் ‘பார்த்திபன் காதல்’ ஒரு முழுமையான காதல் கதையாக உருவாகிறது. கும்பகோணம், ராஜபாளையம், தென்காசி போன்ற இடங்களில் விரைவில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது” என்றார்.
ஒளிப்பதிவு – தங்கையா மாடசாமி
இசை – பில்லா
பாடல்கள் – யுகபாரதி
எடிட்டிங் – ஸ்ரீகாந்த்
கலை – எஸ்.எம்.சரவணன்
ஸ்டண்ட் – மகேஷ்
நடனம் – விஜி சதீஷ்
தயாரிப்பு மேற்பார்வை – ராஜசேகர்
திரைக்கதை, வசனம் – எஸ்.குமரேசன், ஜோ ஜார்ஜ்
மக்கள் தொடர்பு – மணவை புவன்