பாக். தேர்தல் முடிவுகள்: முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் ஆட்சி அமைக்கிறார்
272 தொகுதிகள் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. மாலை வாக்குப்பதிவு முடிந்ததும் உடனே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இதுவரை எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கை அடிப்படையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரீக்–இ–இன்சாப் கட்சி 119 இடங்களிலும், தற்போதைய ஆளுங்கட்சியான நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 56 இடங்களிலும், முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ மகன் பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 34 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன.
137 இடங்களில் வெற்றி பெறும் கட்சி பாகிஸ்தானில் ஆட்சி அமைக்கும் என்கிற சூழல் இருக்கும் நிலையில், இம்ரான் கான் கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. எனவே, வேறு சில சிறிய கட்சிகளின் ஆதரவுடன் இம்ரான் கான் ஆட்சி அமைப்பார் என தெரிகிறது.