விஜய் சேதுபதிக்கு “ரொம்பவே ஸ்பெஷலான நடிகை”!

7சி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஆறுமுககுமார், அம்மே நாராயணா என்டர்டைன்மென்ட் சார்பில் கணேஷ் காளிமுத்து, ரமேஷ் காளிமுத்து ஆகியோரது தயாரிப்பில், விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பத்து சொல்றேன்’. படத்தின் தயாரிப்பாளரான ஆறுமுககுமார் எழுதி இயக்கி இருக்கும் இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். கிளாப் போர்டு புரொடக்‌ஷன்ஸ் சத்தியமூர்த்தி வெளியிட, வரும் பிப்ரவரி 2ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் நடிகர்கள் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், டேனியேல், ரமேஷ் திலக், கூத்துப்பட்டறை முத்துக்குமார், நடிகைகள் காயத்ரி, நிஹாரிக்கா, இயக்குனர் ஆறுமுககுமார், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவாளர் ஸ்ரீ சரவணன், எடிட்டர் கோவிந்தராஜ், பாடலாசிரியர்கள் கார்த்திக் நேத்தா, முத்தமிழ், மற்றும் திங்க் மியூசிக் சந்தோஷ், லைன் புரொட்யூசர் யோகேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினார்கள்.

p15

இவர்களில் சிலரது பேச்சு விவரம் வருமாறு:

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் :

இந்த படம் எனக்குள் பெரும் மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது. என் நலனில் மிகுந்த அக்கறை உடையவர் விஜய் சேதுபதி. அவரும் இயக்குனரும் என் மேல் முழு நம்பிக்கை வைத்து, முழு சுதந்திரம் கொடுத்தனர். அது தான் இந்த படத்தில் இசையாய் வெளிப்பட்டிருக்கிறது.

நடிகர் டேனியல்:

‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் என்னை யாருமே பாராட்டவில்லை. படத்தை பார்த்த எல்லோருமே எல்லா இடத்திலும் என்னிடம் விஜய் சேதுபதி பற்றி தான் விசாரித்துக்கொண்டே இருந்தார்கள். அவரோடு இந்த படத்தில் மீண்டும் இணைந்து நடித்திருப்பது மகிழ்ச்சி. இப்படத்தில் நான் பேசிய ஒரு வசனம் நிச்சயம் ட்ரெண்ட் ஆகும்னு நம்புறேன்.

நடிகர் ஆர்ஜே ரமேஷ் திலக்:

படத்தில் ஒப்பந்தமாகும்போது விஜய் சேதுபதி மட்டும் தான் எனக்கு அறிமுகமானவர், மொத்த குழுவும் எப்படியிருக்குமோ என்ற பயத்தில் தான் ஷூட்டிங் போனேன். ஆனால் மொத்த குழுவும் ரொம்ப நெருங்கி பழகியது.

இயக்குனர் ஆறுமுகத்துக்கு நல்ல காமெடி சென்ஸ் இருக்கிறது. நல்ல காமெடி நடிகராக வரவும் வாய்ப்பு இருக்கிறது.

‘சூது கவ்வும்’ படத்தில் பார்த்த விஜய் சேதுபதிக்கும் இந்த படத்தில் வரும் விஜய் சேதுபதிக்கும் நடிப்பில் நிறைய மாற்றம்.

காயத்ரி மாதிரி ஒரு நடிகையை ஏன் தமிழ் சினிமா இன்னும் கொண்டாடவில்லை என தெரியவில்லை. நிறைய உழைப்பை போட்டு நடித்திருக்கிறார். இந்த படத்தில் கொண்டாடப்படுவார்.

0a1b

நடிகை காயத்ரி:

இந்த படத்தில் கோதாவரினு ஒரு கதாபாத்திரம் இருக்கு, நடிக்கிறீங்களானு கேட்டாங்க. ஆறுமுககுமார் தயாரிப்பாளராக, இயக்குனராக இருந்தும் கொஞ்சம்கூட பதட்டமே இல்லாமல் ரொம்பவே கூலாக இருந்தார்.

இந்த குழுவில் இருந்த எல்லோருடனும் ஏற்கனவே அறிமுகம் இருந்ததால் நல்ல ஒரு அனுபவமாக அமைந்தது. தலக்கோணம் காட்டில் மொத்த குழுவுடன் பழக நிறைய வாய்ப்பு கிடைத்தது.

நடிகர் விஜய் சேதுபதி:

ஒரு தெளிந்த நீரோடை போல மிகவும் தெளிவானவர் இயக்குனர் ஆறுமுககுமார். ஆள் பார்த்து பழகாமல், எல்லோரையும் சமமாக நினைத்து பழகக் கூடியவர். அவர் முதல் படத்திலேயே  தயாரித்து இயக்கியிருக்கிறார்.

தன் திறமை மேல் நம்பிக்கை வைத்து உழைக்கும் ஹீரோ தான் கௌதம் கார்த்திக். எந்த ஈகோவும் இல்லாத, நன்கு முதிர்ந்த அனுபவம் கொண்டவர். அவரை இந்த படத்தில் பரிந்துரைத்ததற்கு பெருமைப்படுகிறேன்.

காயத்ரி எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். இந்த வருடம் அவருக்கு மிக சிறந்த வருடமாக இருக்கும்.