ரா.கி.நகரில் நோட்டாவிடம் தோற்றது பாஜக: இன்று பெரியார் நினைவு நாள்!
“தமிழகத்தில் பாஜக நிச்சயம் காலூன்றும்” என அக்கட்சியின் தமிழக தலைவர்கள் ஊடகங்களில் முழங்கிவருவது பற்றி கேட்டதற்கு, “கால் இருந்தால் தானே ஊன்றுவதற்கு? அந்த கட்சியே கால் இல்லாமல் ஆவி மாதிரி அலைஞ்சுக்கிட்டிருக்கு…” என்று முன்பு பதிலளித்தார் நாஞ்சில் சம்பத். அவரது கூற்றை உண்மை என நிரூபித்திருக்கிறார்கள் சென்னை ராதாகிருஷ்ணன் நகர் வாக்காளர்கள்.
ரா.கி.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில், ஆரம்பத்தில் இருந்தே பாஜக வேட்பாளர் கரு. நாகராஜன் படுகேவலமாக பின்தங்கியே காணப்பட்டார். ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் அவருக்கு மிக மிகக் குறைவான வாக்குகளே கிடைத்தன.
வாக்கு எண்ணிக்கையின் இறுதியில், பாஜக வேட்பாளர் கரு. நாகராஜன் வெறும் 1,417 வாக்குகள் மட்டுமே பெற்று, படுதோல்வி அடைந்து, டெபாசிட் இழந்தார். அவரை விட நோட்டாவுக்கு கூடுதலாக 956 வாக்குகள் பதிவாகியுள்ளன. நோட்டாவுக்கு கிடைத்துள்ள வாக்குகள் 2,373.
பெரியார் நினைவு நாளான இன்று, பெரியாரியத்தின் முதல் எதிரியான பாஜக மரண அடி வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. நினைவில் நிறுத்தி மகிழத்தக்கது.