“மோடியின் புதிய ரூபாய் நோட்டு தீவிரவாதியை கண்டால் அலறும்! ‘எச்சரிக்கை ஒலி’ எழுப்பும்!!”
புதிய ரூவா நோட்டின் சிறப்பம்சங்கள் பற்றி நண்பரின் பதிவு உங்களுக்காக:-
வங்கியிலிருந்து புதிதாக வாங்கிய இரண்டாயிரம் ரூபாய்த் தாளோடு நண்பர் ஒருவர் வந்து என்னை சந்தித்தார். “எங்கே, அந்த ரூபாய் நோட்டை காண்பியுங்கள்” என்று ஆர்வமிகுதியில் கேட்கவே சிரித்துக்கொண்டே தந்தார்.
கையில் வந்த பளபளா நோட்டை பார்த்ததும் எனக்குள் ஒரு பூரிப்பு. ” இருங்க, என் பாக்கெட்ல வச்சிட்டுத் தர்றேன்” என சொல்லி, பாக்கெட்டுக்குள் வைத்ததும், திடீரென பட பட வென ஒரு சத்தம். நான் வெலவெலத்துப் போய் நண்பரை பயத்துடன் பார்க்க அவரோ குறும்புப் புன்னகை பூத்தபடியே என்னை பார்த்தார்.
பிறகுதான் புது 2000 ரூபாய் நோட்டு பற்றி என்னிடம் விளக்கினார். அதாவது, “அந்த நோட்டை யார் வேண்டுமானாலும் கையில் எடுத்துப் பார்க்க முடியும். ஆனால், அதற்கு சம்பந்தமில்லாத யாராவது அந்த நோட்டை பாக்கெட், மணிபர்சு அல்லது வீட்டிலோ, வெளியிலோ வேறு எங்காவது வைத்தால் அலாரம் அடிக்க ஆரம்பித்துவிடும்! ஒருத்தர் எவ்வளவு நேரம் தான் கையிலேயே 2000 ரூபாய் நோட்டை வைத்திருக்க முடியும்?!
“எல்லாரும் சொல்வது போல இதுவொன்றும் நேனோ டெக்னாலஜியில் தயாரிக்கப்பட்டதல்ல. அதைவிட Advanced நியூரோமார்ஃபிக் டெக்னாலஜி மூலமே இது சாத்தியம் ஆகும். உலகின் வேறெந்த நாட்டிலும் இதுபோன்ற நோட்டு தயாரிக்கப்படவில்லை. இந்தியாவில் தான் முதன்முறையாக இது செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த மூன்றாவது மாதத்திலேயே இது தொடர்பாக ஒரு உயர் தொழில்நுட்ப குழுவை அமைத்து வேலைகளை முடுக்கி விட்டுள்ளார். தனது வெளிநாட்டு பயணங்களின்போதும் அங்குள்ள தொழில்நுட்ப வல்லுநர்களிடம் இது பற்றி விவாதித்து கடைசியாக இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் …!
“பஸ்ஸில் நடத்துனரிடம் ரூ2000 கொடுத்திட்டு, மீதி பணம் தரப்படாவிட்டால், பீப் Song சத்தம் வரும்!
“இது கண்டெய்னர்ல புல்லா வந்தா, சைலன்ட்டா காணாமப்பூடும் டெக்னாலஜியும் உண்டு!
“கோமியத்த அதுமேல தெளிச்சா, கோமாதா தானா வந்து கொள கொள….ன்னு சாணி போடும்!
“புது 2000 ரூபாய் நோட்டு அருகில் யாராவது தீவிரவாதி வந்து விட்டால், உடனே அவர்களின் வியர்வையை வைத்தே ‘தீவிரவாதி’ என்பதை கண்டுபிடித்து, அவன் நெற்றியில் பறந்து சென்று ஒட்டிக்கொண்டு ‘தீவிரவாதி உஷார்… தீவிரவாதி உஷார்…’ என்று கத்த துவங்குமாம்!
“சுற்றி இருக்கும் மக்களின் வியர்வையில் இருந்தே அவர்கள் என்ன மொழி என்று கண்டுபிடித்து விட்டு அந்த மொழியில் கத்துமாம்!
“நீங்க கைல வாங்கின உடனே, ‘பாரத் ஆத்தா கி ஜே’ அப்டீன்னு சொல்லலைன்னா பணம் மாயமா மறைஞ்சிடும்!
“என்ன ஆச்சரியம்… 2000 ரூபாயின் ஒரு பக்கம் பார்க்கும்போது, மறுபக்கம் இருப்பது தெரியாதாம்!
“இதற்கெல்லாம் எவ்வளவு உழைத்திருக்க வேண்டும் மோடி. தினமும் 20 மணி நேரம் உழைத்துவந்த பிரதமர், இந்த 2000 ரூபாய் நோட்டு உருவாக்க மேலும் 2 மணி நேரம் இதற்காக உழைத்தாராம். நினைக்கும்போதே பரவசத்தில் கைகால் எல்லாம் உதறுகிறது…”
நண்பர் சொன்ன தகவல்களைக் கேட்டு ஆச்சரியத்தின் உச்சிக்கே போனேன். ஒரே நாளில் ஒட்டுமொத்த தேசத்தையே கறுப்புப் பணமற்ற தேசமாக மாற்றிக்காட்டிய பிரதமர் மோடி என் மனதிற்குள் மிக உயர்ந்த இடத்தில் சிம்மாசனம் இட்டு அமர்ந்துள்ளார்.
நான் பிறந்தது முதலே என்னை பலரும் ராசியில்லாதவன், அதிர்ஷ்டம் இல்லாத ஆள், போன ஜென்மத்தில் பாவம் செய்தவன் என்றெல்லாம் கேலி செய்வதுண்டு. ஆனால், இன்று அவர்களை தேடிப் பிடித்து சொல்வேன்: “இப்படிப்பட்ட ஒரு மனிதர் எனக்கு பிரதமராக கிடைத்திருக்கிறார் என்றால் நான் எவ்வளவு அதிர்ஷ்டமும் புண்ணியமும் செய்திருக்கவேண்டும்?!”
ஜெய்ஹிந்த்!
(Shared from Sapan Munisamy)