உலக நாடுகளின் லாபவெறிக்கு ஓர் இனம் அழிக்கப்பட்ட வரலாற்றின் கறுப்பு நாள்
உலக நாடுகளின் லாபவெறிக்கு ஓர் இனம் அழிக்கப்பட்ட வரலாற்றின் கறுப்பு நாள்.
அந்த இனம் கொண்டிருந்த ஒரே பிழை தன் வரலாற்றை மறக்காததுதான். வரலாற்றின் வழியிலான தொடர்ச்சியில் தன் நிலத்தை லாபவெறிக்கு தாரை வார்க்க மறுத்தது தான்.
அந்த லாபவெறிக்கு காவடி தூக்கியதுதான் இந்திய பேரினவாதமும், சிங்கள பேரினவாதமும்.
எந்த இன அழிப்புக்கும் போருக்கும் பின்னால் ஒரு லாப நோக்கு இருக்கும். அதை அறியாமல் வரலாற்று பக்கங்களை புரட்டுவது வீண்.
புலிகள், ஈழத்து மக்கள், ஓர் இன வரலாறு என அனைத்தும் அழிக்கப்பட்டதற்கு பின் ஒளிந்திருக்கும் சிங்கள பேரினவாதத்துக்கும் பின் ஒளிந்திருப்பது ஏகாதிபத்திய போட்டியும் கார்ப்பரெட்டுகளின் லாபவெறியும் என உணர்வோம்.
வரலாற்றை சரியாக புரிந்து கொள்வோம். அப்போதுதான் வரலாறு படைக்க முடியும்.
RAJASANGEETHAN