மத்திய வருணாசிரம அதர்ம ஆட்சியின் பினாமி தான் எடப்ஸ் ஆட்சி: ஆவண ஆதாரம் இதோ!

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய வருணாசிரம அதர்ம ஆட்சியின் கைப்பாவை தான் ‘ஓபன்ஸ்’ என்று செல்லமாக அழைக்கப்படும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணி என்பது தமிழ்நாட்டில் உள்ள குழந்தைகளுக்கு மட்டுமல்ல, காடை, குருவி, கவுதாரிக்குக் கூட தெரிந்த விஷயம் தான்.
ஆனால், ‘எடப்ஸ்’ என்று செல்லமாக அழைக்கப்படும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியும் கூட மோடிக்கு கூஜா தூக்கும் அணிதான், எடப்ஸ் ஆட்சியும் மோடியின் பினாமி ஆட்சிதான் என்பதற்கான ஆதாரம்:
மத்திய வருணாசிரம அதர்ம ஆட்சி பதவியேற்று 3 ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்களின் வெற்றியை விளம்பரப்படுத்தும் விதமாக மலர் ஒன்று தயாரிக்கப்படுவதாகவும், அதற்கு மாவட்ட அளவில் விவரங்களை சேகரித்து அனுப்புமாறும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கு தமிழக எடப்ஸ் அரசின் செய்தி மக்கள் தொடர்பு இயக்குநர் ஆணையிட்டுள்ளார்.
05-05-2017 தேதியிட்ட அந்த ஆணையின் நகல்:-