மார்க்ஸ் இருப்பது எது வரை?
மார்க்ஸ்
நீங்கள் உயிரோடு இருந்தபோது
ஊர் ஊராய் விரட்டப்பட்டீர்
நாடு நாடாய் துரத்தப்பட்டீர்
இன்று
ஒரு புயலைப் போல வெளிப்படையாகவும்
ஒரு பூகம்பத்தைப் போல தலைமறைவாகவும்
நீங்கள் நடந்து செல்லாத ஊரேது! நாடேது!!
– கவிஞர் இன்குலாப்
# # #
மனித உயிரினத்தில்
சுரண்டலும் ஆதிக்கமும் இருக்கும்வரை
இக்கொடுமைகளுக்கு ஆளாகும்
கடைசியொரு மனிதன் இருக்கும்வரை
கையில் ஏதோவொரு ஆயுதம் ஏந்தி
கலகம் செய்தபடி இருப்பான் கார்ல் மார்க்ஸ்!
– அமரகீதன்
(இன்று கார்ல் மார்க்ஸ் நினைவு தினம்)