“கர்நாடகா நமக்கு தண்ணீர் தராது; ஆனால் முதல்வர், சூப்பர் ஸ்டார், கதாநாயகி தரும்!” – பேரரசு

முத்து சன்னதி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக ரேணுகா ஜெகதீஷ் தயாரிக்கும் படம் ‘மல்லி’. இந்த படத்தில் ரத்தன் மெளலி நாயகனாக நடிக்கிறார். இவர் ‘13-ம் பக்கம் பார்க்க’,  ‘வெள்ளிக்கிழமை 13-ம் தேதி’, ‘அரசகுலம்’ ஆகிய படங்களில் நாயகனாக நடித்தவர்.

நாயகியாக மஞ்சு தீக்‌ஷித் அறிமுகமாகிறார். இவர் மும்பையில் கிஷோர் நமீத் கபூர் நடத்தும் சினிமா பயிற்சி பள்ளியில் நடிப்பு பயின்றவர். இந்த பள்ளியில் தான் ஹிருத்திக் ரோஷன், அல்லு அர்ஜூன், ரன்வீர்கபூர் போன்றவர்கள் நடிப்பை பயின்றார்கள்..

இன்னொரு நாயகியாக தேஜுஸ்ரீ  நடிக்கிறார்.  இவர்களுடன் அருண், ரவிச்சந்திரன், நாகேஷ் சைமன், டெலிபோன்ராஜ், அம்சவேலு மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு : பிகேஹெச்.தாஸ்.

இசை : தினேஷ் – பஷீர்

பாடல்கள் : புலவர் சிதம்பரனாதன் பாண்டிதுரை

எடிட்டிங் : பி.எஸ்.வாசு

கலை  :  வினோத்

நடனம் : சுரேஷ்

ஸ்டண்ட்  : ஸ்டண்ட் ஷிவு

தயாரிப்பு நிர்வாகம்  : நடராஜன்

கதை, திரைக்கதை, தயாரிப்பு : ரேணுகா ஜெகதீஷ்.

வசனம், இயக்கம் : வெங்கி நிலா

கர்நாடக மாநிலத்தவர் பலரது பங்கேற்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன், தயாரிப்பாளர் தேனப்பன், இயக்குனர் பேரரசு ஆகியோர் பாடல்களை வெளியிட்டார்கள்.

0a1d

இந்நிகழ்ச்சியில் பத்திரிகை தொடர்பாளர்கள் சங்க பொருளாளர் விஜயமுரளி பேசுகையில், ”கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் வராவிட்டாலும் தயாரிப்பாளர்களாவது வருகிறார்களே… சந்தோசம் ” என்றார்.

அடுத்து பேசிய இயக்குனர் பேரரசு, “கர்நாடகாகாரர்கள் நமக்கு முதல்வரை தருவார்கள். சூப்பர் ஸ்டார்களை தருவார்கள். ஆனால் தண்ணீர் தர மாட்டார்கள். காவிரியை தர மாட்டர்கள் . ஆனால் காவேரி என்ற பெண் இருந்தால் கதாநாயகியாக நமக்கு தருவார்கள்” என்றார்.

‘மல்லி’ படத்தின் இயக்குனர் வெங்கி நிலா பேசுகையில், “தன் காதலி மஞ்சு தீக்‌ஷித்துடன் உயிருக்கு பயந்து ஓடும் நாயகன் ரத்தன் மெளலி, காட்டுக்குள் இருக்கும் ஒரு பாழடைந்த பங்களாவுக்குள் அடைக்கலமாகிறார். அங்கே நடக்கும் திகில் சம்பவங்களே இப்படத்தின் கதை. படப்பிடிப்பு முழுவதும் வேலூர், ஏலகிரி, பெங்களூர், மைசூர் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது” என்றார்.