’எல்ஜிஎம்’ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா – புகைப்படங்கள்

பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி இணைந்து, அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ”தோனி எண்டர்டெயின்மெண்ட்” சார்பாக தயாரித்து இருக்கும் திரைப்படம் LGM (LET”S GET MARRIED). இப்படத்தில் நாயகன் நாயகியாக ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா நடிக்க, பிற முக்கிய கதாபாத்திரத்தில் நதியா, யோகி பாபு மற்றும் ”மிர்ச்சி” விஜய் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ரமேஷ் தமிழ்மணி இப்படத்தை இயக்கி இருப்பதோடு, இசையும் அமைத்திருக்கிறார்.
இத்திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் கோலாகலத்துடன் ஆரவாரமாக நடைபெற்றது. இ ந் நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:-