‘பிரபு தேவாவின் ‘லட்சுமி’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்!
ஒரு நடன ஆசிரியருக்கும், அவரிடம் நடனம் கற்றுக்கொள்ளும் சிறுமிக்கும் இடையிலான பாசப் பிணைப்பைச் சொல்லும் படம் ‘லட்சுமி’. இதில் நடன ஆசிரியராக பிரபு தேவாவும், அவரிடம் நடனம் கற்றுக்கொள்ளும் சிறுமியாக பேபி டித்யா பாண்டேவும், இவர்களுடன் ஐஸ்வர்யா ராஜேஷூம் நடித்திருக்கிறார்கள்.
இயக்குனர் விஜய் இயக்கியிருக்கும் இப்படத்துக்கு தணிக்கைக் குழு ‘யு’ சான்றிதழ் கொடுத்திருக்கிறது. மேலும், படத்திற்கு ஒரு வெட்டு கூட இல்லை என்பதில் படக்குழுவுக்கு கூடுதல் மகிழ்ச்சி.
இத்திரைப்படத்தின் காட்சி விளம்பரங்களும், பாடல்களும் ஏற்கனவே அனைத்து வயதினரையும் ஈர்த்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.