“அவர்கள் வெறும் பிரியாணி திருடர்கள் அல்ல!”

அவர்கள் வெறும் பிரியாணி திருடர்கள் இல்லை.

முகநூல் முழுதும், கோவை இந்துத்துவா கலவரக்காரர்களை ‘பிரியாணி திருடர்’களாக சித்தரித்து, ஆசை தீர நாம் கலாய்த்து கொண்டிருக்கிறோம்.

அவ்வளவுதானா அவர்கள்?

இரண்டு இந்து மதவெறி கும்பலுக்குள் சொந்தப் பகை காரணமாக விரோதம் ஏற்பட்டு, ஒருவன் கொலையாகிறான். அவனின் இறுதி ஊர்வலத்தின்போது கலவரம் கட்டவிழ்த்துவிடப்படுகிறது.

அந்த சாவை முக்கிய பிரச்சனையாக்கி கோவையை ஸ்தம்பிக்க வைக்க முடிகிறது அவர்களால். அது முதல் வெற்றி.

அந்த சாவை சம்பந்தமேயில்லாமல் இந்து – முஸ்லிம் பிரச்சனையாக்கப் பார்த்தது இரண்டாம் வெற்றி.

கலவரம் நடக்கும்போது அரசதிகாரம் வாளாவிருந்து வேடிக்கை பார்த்தது மூன்றாம் வெற்றி.

“இது பெரியார் பூமி” என்று நாம் சொல்லிக்கொண்டிருக்கையில், மக்கள் செல்வாக்கில்லாத ஒரு சிறு கூட்டத்தால் இது சாத்திமாக்கப்பட்டிருக்கிறது.

பிரியாணி அண்டா, செல்போன்களை திருடினார்கள் என்று அவர்களுக்கு திருட்டுப் பட்டம் கட்டிக்கொண்டிருக்கிறோம்.

அந்த கலவரத்தில் “தமிழகம் அடுத்த குஜராத்” என்ற குரலை எத்தனை பேர் கவனித்தோம்?

கலவரம் செய்துகொண்டே செல்லும் மதவெறி கும்பலுக்கு எதிரே ஒரு இஸ்லாமியன் தென்பட்டிருந்தால்? அவன் பிரியாணியாகியிருப்பான். ஒரு பெண்ணாக இருக்கும்பட்சத்தில் கூட்டு வல்லுறவுக்கு ஆளாகியிருப்பாள்.

அத்தனை சாத்தியங்களையும் உள்ளடக்கிய கும்பல் அது. அவர்கள் வெறும் காமெடி பீஸுகள் அல்ல.

அவர்களின் சீனியர்கள் குஜராத்தில் நடத்திக் காட்டியவை ஏராளம். வாயில் பெட்ரோலை ஊற்றி பற்ற வைத்து உடலை வெடிக்க செய்வது, கர்ப்பிணி வயிற்றைக் கிழித்து சிசுவைக் கொல்வது, சிலிண்டரை வெடிக்க வைத்து வீட்டை தரைமட்டமாக்குவது… ஏராளம்…ஏராளம்.

வேறொரு சமயத்தில்…
வேறொரு பொய்யில்…
அவர்கள் பிரியாணி திருடிக்கொண்டிருக்க மாட்டார்கள்.

சமூக அக்கறையுள்ள ஒவ்வொருவரும்  சிந்திக்கவேண்டிய தருணமிது.

– THAHIR TIRUPUR