“தற்கால டெக்னாலஜி யால் வளர்ந்துவரும் பிரச்சனையை கூறும் படம் ‘கீ” – நாயகன் ஜீவா

காலீஸ் இயக்கத்தில் ஜீவா, நிக்கி கல்ராணி, ஆர்.ஜே.பாலாஜி, சுஹாசினி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘கீ’ திரைப்படம் பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகிறது. குளோபல் இன்போடெயின்மென்ட் சார்பில் மைக்கேல் ராயப்பன் தயாரித்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது.

படக்குழுவினருடன் தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால், நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் கே.வி.ஆனந்த், தயாரிப்பாளர் தேனப்பன் உள்ளிட்ட பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

k9

இந்நிகழ்வில் பிரபலங்கள் பேசிய பேச்சு விவரம் வருமாறு:

விஜய் சேதுபதி:

சினிமாக்காரன் என்றாலே ஒரு மாதிரி பார்க்கிறார்கள். தரம் தாழ்த்திப் பேசுகிறார்கள். பொதுவாக, மொத்தமாக சினிமாக்காரர்களை கை காட்டிப் பேசும்போது வருத்தமாக உள்ளது. எங்களை தரக்குறைவாக நினைப்பவர்கள் சினிமாவுக்கு வந்து ஒரு படம் எடுத்துப் பாருங்கள். அப்போது தான் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர்களுக்குரிய பிரச்சினைகள் உங்களுக்குத் தெரியும். ஒவ்வொரு படம் எடுத்து முடிக்கும்போதும் உயிர் போய் உயிர் வருகிறது.

‘கீ’ படத்தின் பாடல்களும், ட்ரெய்லரும் பிரமாண்டமாக இருக்கிறது. நண்பன் ஜீவா, நிக்கி கல்ராணி, இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். இயக்குனர் காலீஸின் முதல் பட முயற்சிக்கு வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் மிகப் பெரிய வெற்றியடைந்து வளர வேண்டும்.

விஷால்:

கீ’ இயக்குநர் காலீஸ் இப்படத்தின் ட்ரெய்லரை படப்பிடிப்புக்கு இடையே காட்டினார். அருமையாக இருந்தது. வருங்காலத்தில் நம்பிக்கைக்குரிய இயக்குநராக வருவார். ஜீவாவின் திரையுலக வாழ்க்கையில் முக்கியமான படமாக இது இருக்கும். இப்படம் சரியான முறையில் வெளியிடப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். நிறைய பேர் விஷால் இந்த தயாரிப்பாளருக்கு நல்லது செய்ய வேன்டும் என பேசினார்கள். எனது ‘இரும்புத்திரை’ திரைப்படம் பிப்ரவரி 9ஆம் தேதி வெளிவராது. ஏனென்றால் அதே தேதியில் இப்படம் வெளியாகவுள்ளது. மற்றொரு நல்ல தேதியில் எனது படத்தை வெளியிட்டுக் கொள்கிறேன்.

இயக்குனர் கே.வி.ஆனந்த்:

இசை வெளியீட்டு விழாவிற்கு என்னை அழைத்ததற்கு நன்றி. ஜீவா திறைமையுள்ள நடிகர். விஜய் சேதுபதியும் அப்படித்தான். ஜீவா பிஞ்சிலேயே பழுத்தவர். விஜய் சேதுபதி பழுத்து பிஞ்சானவவர்.

இப்படத்தின் பாடல்களும் காட்சியமைப்பும் மிகவும் பிரமாண்டமாக உள்ளது. இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகருக்கும், இயக்குனர் காலீஸுக்கும் என் வாழ்த்துக்கள். தைரியமாக படத்தை தயாரிக்க முன்வந்த மைக்கேல் ராயப்பனுக்கும் எனது வாழ்த்துக்கள். ஒளிப்பதிவாளர் அபி நந்தன் மிகச் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.

ஆர்.வி.உதயகுமார்:

இந்த படத்தின் போஸ்டர்களை பார்க்கும்போது, இன்றைய தலைமுறையினருக்கு நல்ல கருத்தைச் சொல்லும் படமாக இது அமையும் என்பது தெரிகிறது. ப்ளூவேல் கேம் மாதிரி ஒரு ஆபத்தான விளையாட்டை எதிர்கொள்வதால் ஏற்படும் விளைவுகளை இத்திரைப்படம் தெரிவிக்க உள்ளது. இசையமைப்பாளர்,  இயக்குனர் மற்றும் படத்தில் நடித்த அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

இயக்குனர் காலீஸ்:

இப்படத்தை தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சாருக்கு என் முதல் நன்றி. பல வருடமாக இப்படத்தை தயாரிக்க யாருமே முன்வரவில்லை. ஒரு அறைக்குள் அடைந்து கிடந்தேன். இறுதியாக மைக்கேல் சார் தயாரிக்க ஒத்துக் கொண்டார். ஜீவா, நிக்கி கல்ராணி உள்ளிட்ட அனைவரும் நன்றாக ஒத்துழைத்து நடித்துள்ளார்கள் தயாரிப்பாளர்கள் எங்களைப் போன்ற இளம் இயக்குனர்களுக்கும் வாய்ப்பளித்து உதவ வேண்டும்.

ஜீவா:

இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் கோவிந்த் பத்மசூரியா நடித்துள்ளார். மிகவும் சிறப்பாக நடித்துள்ளார்.

நிக்கி கல்ராணியுடன் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. படத்திற்கு விஷால் சந்திரசேகர் அருமையாக இசையமைத்துள்ளார். அருமையான கதையைக் கொண்டது இத்திரைப்படம். தற்போதைய டெக்னாலஜியில் வளர்ந்துவரும் பிரச்சனையை கூறும் படமாக இது அமையும். தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கும், இயக்குனர் காலீஸுக்கும் நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்.

நிக்கி கல்ராணி:

இப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், இயக்குனர் காலீஸுக்கும் நன்றி. ஜீவா மற்றும் பலருடன் இப்படத்தில் நடித்துள்ளேன். மகிழ்ச்சியாக உள்ளது. சமூகத்திற்கு நல்ல கருத்தை தரும் படமாக இது அமையும். தற்கால சமூகத்தில் இருக்கும் பெண்ணை பிரதிபலிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். விஷால் சந்திரசேகர் சூப்பராக மியூசிக் போட்டு இருக்கிறார்.

கோவிந்த் பத்மசூரியா:

தமிழில் எனக்கு இது முதல் படம். நான் ஜீவா படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன். நான் அவருடைய ரசிகன். படப்பிடிப்பு துவங்குவதற்கு 2 மாதங்களுக்கு முன்பே ட்ரெய்லர் ரெடி பண்ணி விட்டார்கள். இது எனக்கு ரொம்பவே வியப்பாக இருந்தது. படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குனருக்கும், தயாரிப்பயாளருக்கும் எனது நன்றி.

சுஹாசினி:

38 வருடங்களுக்கு முன்பு படத்தில் நடிக்கும்போது எப்படி ஒரு படபடப்பு இருந்ததோ அதேபோல் தற்போது இப்படத்தில் நடிக்கும்போதும் இருந்தது. பழைய காலங்களில்  பெரியவர்களிடம் நிறைய கற்றுக்கொண்டோம். தற்போது காலீஸ் போன்ற அறிமுக இயக்குனர்களான சிறியவர்களிடம் கற்றுக்கொள்கிறோம். படத்தில் அனைவருடனும் நடித்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

விஷால் சந்திரசேகர்:

இப்படத்தில் இசையமைக்க என்னை பரிந்துரை செய்த ஆர்ஜே பாலாஜிக்கு நன்றி. வாய்பளித்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கும் மிக்க நன்றி. பாட்டு எல்லாமே அருமையாக வந்துள்ளது. உங்கள் அனைருக்கும் மிகவும் பிடிக்கும் வகையில் பாடல்களை அழகாக எழுதிய தாமரை, மதன் கார்க்கி, அமுதவன் சுபு ஆகியோருக்கு என் நன்றிகள்.

இமான் அண்ணாச்சி:

இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு என்னை அழைத்த மைக்கேல் ராயப்பன் சாருக்கு நன்றி. படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.