விஷால் – தமன்னா ஜோடியின் ‘கத்தி சண்டை’ 23ஆம் தேதி வெளியாகிறது!
![](http://www.heronewsonline.com/wp-content/uploads/0a1e-11.jpg)
ஜெயம் ரவி, ஹன்சிகா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் அடுத்து தயாரித்திருக்கும் படம் ‘கத்தி சண்டை’.
சுராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி, ஜெகபதி பாபு, சௌந்தரராஜா, மதன்பாப், தருண் அரோரா, சரண் தீப், ஜெயபிரகாஷ், சின்னி ஜெயந்த், நிரோஷா, தாடி பாலாஜி, ஆர்த்தி, பாவா லட்சுமணன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
காமெடியும், ஆக்ஷனும் கலந்து உருவாகியுள்ள இந்த படம் இம்மாதம் 23ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.