கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நிறைவு: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்!
கர்நாடக சட்டப்பேரவைக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தனியார் தொலைக்காட்சிகள் சில தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளன. அதன்படி பல்வேறு கருத்துக் கணிப்புகளிலும் காங்கிரஸ் சராசரியாக 100-க்கும் மேற்பட்ட இடங்களிலும், பாஜக 100-க்கும் குறைவான இடங்களிலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
224 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ள நிலையில் 113 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும். ஆனால் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலானவை எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறும் என்று குறிப்பிடவில்லை. இருப்பினும் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் காங்கிரஸுக்கு சற்று கூடுதல் இடம் கிடைக்கும் என்றே குறிப்பிட்டுள்ளன.
மொத்தம் 72.67% வாக்குபதிவாகியுள்ள நிலையில், ஊடகங்களின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வருமாறு:-
டிவி 9 கருத்துக்கணிப்பு:
பாஜக: 88 – 98
காங்கிரஸ்: 99 – 109
மஜத: 21 – 26
ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பு:
பாஜக: 85- 100
காங்கிரஸ்: 94 – 108
மஜத: 24 – 32
பிற கட்சிகள்: 2. 6
டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு:
பாஜக: 114
காங்கிரஸ்: 86
மஜத: 21
பிற கட்சிகள்: 3
ஜி மேட்ரிக்ஸ் கருத்துக்கணிப்பு:
காங்கிரஸ்: 103 -118
பாஜக: 79 – 94
மஜத: 25 – 33
பிற கட்சிகள்: 21
ஏபிபி நியூஸ் சி வோட்டர்
பாஜக: 66-86
காங்கிரஸ்: 81-101
மஜத: 20-27
பிற கட்சிகள்: 0-3
நியூஸ் நேஷன்
பாஜக: 114
காங்கிரஸ்: 86
மஜத: 21
பிற கட்சிகள்: 3
சுவர்ண நியூஸ் – ஜன் கி பாத்
பாஜக: 94-117
காங்கிரஸ்: 91-106
மஜத: 14-24
பிற கட்சிகள்: 0-2
கருத்துக் கணிப்பு முடிவுகள் இவ்வாறாக இருக்கும் சூழலில் வெற்றி யாருக்கு என்பது வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 13 ஆம் தேதி பகல் 1 மணி அளவிலேயே உறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.