சமீப காலமாக உங்கள் நடிப்பு ரொம்ப ரொம்ப மோசமாக இருக்கிறது கமல் சார்!
சற்றே இருட்டான அறை.
இரண்டு விளக்குகள் மட்டுமே எரிகின்றன.
மேக்கப்போடு அந்த நடிகர் கோபமாக டிவியில் செய்திகளை கேட்கிறார்.. செய்தியில் ஸ்டாலின் ‘அந்தக் கலைஞரின் மகனாக இருக்கும் நான் சொல்கிறேன்’ என்று பேச, அதனைத் தொடர்ந்து எச் ராசா ’ஆன்ட்டி இண்டியன்’ என்று சொல்ல, உடனே டார்ச்சால் டீவியை ஓங்கி அடிக்கிறார். (நடிப்புதான்). டிவி உடையும் சப்தம். (சப்தம் மட்டும்தான்.. ஒரு டிவியை கூட உண்மையில் உடைக்க மாட்டார்.)
’வாரிசு அரசியலுக்கா நீங்கள் ஓட்டு போடப் போகிறீர்கள்?’ என்று கோபமாக கேட்கிறார்..
டீ மானிட்டேஷன் பற்றியெல்லாம் பேசுகிறார் (அப்போது ஆதரித்தார் என்பது வேறு கதை).
’அனிதாவின் தாய் தந்தையிடம் கேளுங்கள் யாருக்கு ஓட்டு போடவேண்டும் என்று’ என உபதேசம் செய்கிறார். (அனிதா இறந்தபோது, ‘ அனிதாவைப் பற்றி பேச வைகோ, திருமாவளவன் இருக்கிறார்கள். நான் டெங்குவைப் பற்றி பேசப் போகிறேன்’’ என்றது வேறு கதை).
கடைசியில் நியாயம் காக்க டார்ச் லைட்டிற்கு ஓட்டு கேட்கிறார். (அப்படி என்னதான் போராட்டம் நடத்தி மக்களோடு கலந்தார் என்பதுதான் தெரியவில்லை)
இதேபோல்தான் பொள்ளாச்சி விவகாரத்தை பேசும்போதும் பொருந்தாத நிறைய மேக்கப்புடன் (அதே இரண்டு லைட் செட்டிங்) ஒரு நாற்காலியில் அமர்ந்து உதடுகள் துடிக்க நா தழுதழுக்க கோபம் காட்டினார்! ( களத்தில் அல்ல, வீட்டிற்குள் போட்ட செட்டிங்கில்)
சமீப காலமாகமாகவே உங்கள் நடிப்பு ரொம்ப ரொம்ப மோசமாக இருக்கிறது கமல் சார். (நான் உங்கள் படங்களின் ரசிகன் என்று சொல்ல வெட்கபடத்தான் செய்கிறேன்).
உங்களின் இந்தப் படம் கூட, மோடியின் ஆட்சி அவலத்தை பற்றி தொடர்ந்து மக்கள் பேசி வருவதை திசை மாற்றுவதற்காகத்தான் என்பது நன்றாகவே தெரிகிறது.. (அது உங்கள் பொழைப்பு).
நீங்கள் பெயருக்கேற்றார் போல் தாமரை (பிஜேபி) தான் சார். நீங்கள்தானே சொன்னீர்கள் – கமல் என்றால் தாமரை மலரும் என்று!
– முகமது பாட்சா