‘இந்தியன் 2’ திரைப்படத்தின் நேரம் 11 நிமிடம் 51 வினாடிகள் குறைப்பு!

கமலஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், கடந்த 12ஆம் தேதி உலகெங்கும் திரைக்கு வந்திருக்கும் திரைப்படம் ’இந்தியன் 2’. லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் இப்படத்தை அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரித்திருக்கிறார். அனிருத் இசை அமைத்திருக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பரவலாக வரவேற்பு இருந்து வருகிற போதிலும், ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் கலவையான விமர்சனங்கள் வெளியாயின. படத்தின் நீளம் அதிகம் என்பது பொதுவான கருத்தாக இருந்தது.
இதை கருத்தில் கொண்டு, தற்போது படத்தின் நேரத்தை 11 நிமிடங்கள் 51 வினாடிகள் குறைத்துள்ளது படக்குழு. அதாவது, 11 நிமிடங்கள் 51 வினாடிகள் ஓடக்கூடிய காட்சிகள் வெட்டப்பட்டுள்ளன.
இப்போது அனைத்துத் திரையரங்குகளிலும் நேரம் குறைக்கப்பட்ட பதிப்பு தான் திரையிடப்படுகிறது.