கமல் உடல் மொழியில் மக்கள் சார்ந்த வசீகரம் மிஸ்ஸிங்!
கமல் பேட்டி கொடுக்க வருகிறபோது, என்னமோ ஜிம்முக்கு போய் ஒர்க் அவுட் செய்துவிட்டு வருவது போன்றே நெஞ்சை உயர்த்தி வருகிறார்.
அது மட்டும் அல்ல.
ஆனந்த விகடன் தொடரில், போட்டோ ஷூட்டுக்கு மாடலிங் கொடுப்பது போன்றே போஸ் கொடுக்கிறார்.
இவை எல்லாம் ரசிக்கிற மாதிரி இல்லை.
நீங்கள் ஒரு நடிகனாக இருக்கிறபட்சத்தில் அதுவெல்லாம் ஓ.கே. ஆனால் அரசியல் களத்திற்கு வருகிறபோது மக்கள் சார்ந்த வசீகரம் இருக்க வேண்டும். அது உங்களிடம் முழுவதும் மிஸ்ஸிங்.
இதை ‘அரசியல் ட்ரெண்ட்’ என்று சொன்னால், உங்களுக்கு அப்டேட் இல்லை என்பேன்.
உதாரணத்திற்கு, ஒபாமா சார்ந்த புகைப்படங்கள் பாருங்கள். ஒரு ரிச் லுக் இருக்கும். ஆனால், அதில் ஒரு தொண்டன் போன்று, வேலையாள் போன்று, இயல்பான குடிமகன் போன்று லுக் இருக்கும். கம்பிரமும் பணிவும் கலந்த நடை அது.
உங்களிடம் இன்னமும் “ஆழ்வார்பேட்டை ஆண்டவா… “ என்கிற குத்து பாட்டும் இல்லாமல் பரதமும் இல்லாமல் இருக்கும் உடல் மொழிதான் இருக்கிறது.
என்ன செய்ய…?
EVIDENCE KATHIR