கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைகிறார் டி.ராஜேந்தர்!
கே.வி.ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதியும், டி,ராஜேந்தரும் இணைந்து நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை தனுஷின் ‘அனேகன்’, ஜெயம் ரவியின் ‘தனி ஒருவன்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தயாரித்த ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் தயாரிக்கிறார்கள். இவர்கள் தயாரிக்கும் 18-வது படம் இது.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை இயக்குனர் கே.வி.ஆனந்த், எழுத்தாளர்கள் சுபா, பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து ஆகியோர் இணைந்து எழுதுகிறார்கள்.
படத்தின் கதாநாயகி உள்ளிட்ட நடிகர்- நடிகையர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர் பற்றிய விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என படநிறுவனம் தெரிவித்துள்ளது.