“எந்த மூஞ்சியை வச்சிட்டு ஜூலியை விமர்சனம் பண்றீங்கன்னு தெரியல…!”
கடந்த ரெண்டு நாளா விடாப்பிடியா உட்கார்ந்து பிக் பாஸ் பார்த்தேன்.
உங்களுக்கு இன்னமும் புரியாத ஒரு விஷயம் இருக்கு. இந்த பொண்ணு (ஜூலி) கேரக்டர்ல அச்சு அசல்ல இருந்த ஒரு பெண்ணை தான் 16 வருஷமா தனிப்பெரும்பான்மையோட ஆட்சியில உட்கார வெச்சீங்க…
இந்த ஜூலி கேரக்டரின் பக்காவான பிரதிபலிப்பாக, “நாம வாழணும்னா, யாரை வேணும்னாலும், எத்தனை பேரை வேணும்னாலும் கொல்லலாம்” அப்படின்னு ‘தல’ வசனம் பேசினப்போ, தியேட்டர்ல காது கிழிய விசில் அடிச்சு படத்தை 100 நாள் ஓட வெச்சீங்க…
எந்த மூஞ்சியை வெச்சுட்டு இந்த மாதிரி ஒரு நபரை 24×7 விமர்சனம் பண்றீங்கன்னு தெரியல…!
இங்க சில பேர் “ஜூலியை மன்னிச்சுட்டோம்… ஆண்டவருக்காக செய்யறோம்… பிழைச்சுப்போ…’ அப்படின்னு ஸ்டேட்டஸ் போடறாங்க. எனக்கு சிரிப்பு தாங்கல…!
கமலஹாசன் முன்னால உட்காரும்போது சாவகாசமா, முதுகு சாய உட்கார்ந்து, கட்டிப் பிடிக்காம, கால்ல விழுந்து கதறாம, தில்லா போச்சு பார் அந்த பொண்ணு (ஓவியா)… I like that attitude…!
உங்களுக்கெல்லாம் ஜூலியை கிண்டல் பண்ணவோ, தெருவுல நடந்து போகும்போது அவளை ஒருமையில கூப்பிட்டு பொறுக்கித்தனம் பண்ணவோ, துளி கூட அருகதை கிடையாது.
Julie is the exact reflection of many slimy characters I see here among people I have moved with. If you spit on her, you are spitting on yourself.
அதாவது, நீ பெரிய உத்தம்புத்திரனா உன்னையே நினைச்சு, நாளைக்கு ஜூலியை ஏகடியமோ, வம்பிழுத்தோ, காரித் துப்பினால், அது நீ மல்லாக்க படுத்து துப்பிக் கொள்வதற்கு சமம்..
சில நாள் முன்னாடி, “அந்த பொண்ணு பொதுவெளியில் நடந்து போகவே அபாயமான சூழலை உருவாக்குகிறீர்கள்” என்று எழுதினேன். இப்பவும் அப்படி செய்தீர்களானால், நீங்கள் சுயபரிசோதனை செய்துகொள்ளாத தரம்கெட்ட குற்றவாளிகள்.
இதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்…
There are high chances that you will have blood on your hands if you force her to the extreme. You push her to that, you are pushing yourselves to the brink of committing suicide like a psychopath.
Stop this here. Right now.
KARTHIK RANGARAJAN