“எந்த குழந்தையிடம் இருந்து ‘ஜோதி’ படத்தை ஆரம்பித்தோமோ, அந்த குழந்தையை கொண்டுவந்து உங்கள் முன் காட்டுகிறோம்!”

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ’ஜோதி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேப்–ல் நடைபெற்றது. அங்கு பத்திரிகையாளர்களுக்கு ’ஜோதி’ படத்தை திரையிட்டனர். படம் முடியும் வரை மிகவும் அமைதியுடன் பார்த்துக்கொண்டிருந்த பத்திரிகையாளர்கள், காட்சி முடிவில் பலத்த கரகோஷம் எழுப்பினர். அதுவே ஒரு நல்ல படத்திற்கான அடையாளமாக காணப்பட்டது. ஒவ்வொரு பத்திரிகையாளரும் வெளியே வரும்போது திரைப்படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு நடிகர்களையும், ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞர்களையும் வாழ்த்தி ”இது மிகச் சிறந்த திரைப்படம்” என பாராட்டு தெரிவித்தனர்.

பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் AV கிருஷ்ண பரமாத்மா, இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், துணை நடிகர் ஹரி க்ரிஷ், தயாரிப்பாளர் SP ராஜா சேதுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். படத்துக்கான உண்மை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட  பெண்மணி அந்த குழந்தையோடு, குடும்பத்தாருடன் கலந்துகொண்டார்.

0a1d

பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் AV கிருஷ்ண பரமாத்மா கூறியதாவது,
”இப்படம் ஒரு  உண்மை சம்பவம் மட்டுமில்லாமல் பல உண்மை சம்பவங்களை உள்ளடக்கியது. வருஷத்துக்கு 40000 குழந்தைகள் தொலைந்து, அதில் 11000 குழந்தைகள் கண்டுபிடிக்கப்படாமலே போகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 173 குழந்தைகள் காணாமல் போகிறது. இப்படம் ஒரு ஆணோட கோபத்தைவிட ஒரு பெண்ணோட அமைதி ரொம்ப ஆபத்தானது என்று நிச்சயமாக உணர்த்தும். வரும் ஜூலை 28 அன்று ஜோதி படம் திரையரங்குகளில் வெளியாகிறது” என்று கூறினார்.

இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் கூறியதாவது,
“நா நா  படத்தின் மூலம் இந்தப்படத்தின் வாய்ப்பு கிடைத்தது. முதலில் என்னிடம் படம் வரும்போது படத்தில் பாடல்களே இல்லை. அதிக காட்சிகளில் பல எமோஷனல் விசியம் இருந்ததால் அதையெல்லாம் பாடல் மூலம் கொடுத்தால் மேலும் சிறப்பாக இருக்கும் என நினைத்து என் விருப்பத்தை தெரிவித்தேன். பாடல் சிறப்பாக இருந்ததால் இயக்குனரும், செலவை பொருட்படுத்தாமல் தயாரிப்பாளரும் உடனே சம்மதித்து விட்டனர்” என்று கூறினார்.

துணை நடிகர் ஹரி க்ரிஷ் கூறியதாவது,
“என்னை முதலில் ஒரு சிறிய கதாபாத்திரம் என்று சொல்லித்தான் அழைத்தார்கள். படப்பிடிப்புக்கு சென்ற பிறகுதான் தெரிந்தது எனது கதாபாத்திரம் எவ்வளவு பெரியது என்று. மற்றவர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவமோ அந்த அளவிற்கு எனது கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. படப்பிடிப்பின்போது எனது இரண்டுகால் ஜவ்வும் கிழிந்து மூன்றுமாத காலம் படுத்த படுக்கையாகவே இருந்தேன். அந்த அளவிற்கு கடுமையான உழைப்பை கொடுத்திருக்கிறோம்” எனக்கூறினார்.

தயாரிப்பாளர் SP ராஜாசேதுபதி கூறியதாவது,
“இந்த உண்மை சம்பவத்தை அறியும் போது இதை படமாக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். திரைப்படக்கல்லூரியில் AV கிருஷ்ண பரமாத்மா இயக்கிய குறும்படத்தை பார்த்து இருக்கிறேன். மிகவும் சிறப்பாக இருந்தது. அதனால் இந்த சம்பவத்தை எழுதி இயக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தேன். படம் மிகவும் சிறப்பாக வந்துள்ளது. எந்த குழந்தையிடம் இருந்து, இந்த படத்தை ஆரம்பித்தமோ அந்த குழந்தையை கொண்டுவந்து உங்கள் முன் காட்டுகிறோம்”
எனக் கூறி அக்குழந்தையையும், குடும்பத்தையும் காட்டும்போது அனைத்து பத்திரிக்கையாளர்களும் கனிவுடன் பார்த்தனர். குழந்தை காணாமல் போன வலியால் அப்பெண்மணி பேச முடியாமல் திகைத்தார்.

நடிகர்கள்:

வெற்றி (சக்தி சிவபாலன்)
ஷீலா ராஜ்குமார் (அருள் ஜோதி)
கிரிஷா குரூப்(ஜானகி)
இளங்கோ குமரவேல் (முத்து குமாரசுவாமி)
மைம் கோபி (தமிழரசு)
நான் சரவணன் (அஷ்வின்)
சாய் பிரியங்கா ருத் (சாந்தி)
ராஜா சேதுபதி (ரங்கா)
பூஜிதா தேவராஜ் (காமினி)

தொழில்நுட்ப கலைஞர்கள்:

இயக்குனர்: AV கிருஷ்ண பரமாத்மா
ஒளிப்பதிவு: செசி ஜெயா
இசை: ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்
படத்தொகுப்பு: சத்ய மூர்த்தி
பாடல்கள்:கார்த்திக் நேத்தா
பாடகர்கள்: கே. ஜே ஜேசுதாஸ், பல்ராம், கார்த்திக், ஆர்த்தி கோவிந்த்
நடனம்: சுவிகுமார்
சண்டை: சக்தி சரவணன்
மக்கள் தொடர்பு: வின்சன் சி. எம்
தயாரிப்பு: SP ராஜா சேதுபதி