ஜெயலலிதா உடல்நிலை: 4 நாட்களாக மௌனம் காக்கும் அப்போலோ நிர்வாகம்!
தமிழக முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த (செப்டம்பர்) மாதம் 22ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாச கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
லண்டன் மருத்துவர் ரிச்சட் பீல், எய்ம்ஸ் மருத்துவர்கள் கில்நானி, அஞ்சான் திர்கா, நிதிஷ் நாயக் ஆகியோர் அப்போலோ மருத்துவர்களுடன் இணைந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
ஜெயலலிதாவின் உடல்நிலை, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கடந்த 10ஆம் தேதி (திங்கட்கிழமை) அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் செய்திக்குறிப்பு வெளியிட்டது. அதன்பிறகு கட ந்த 4 நாட்களாக அது செய்திக்குறிப்பு எதுவும் வெளியிடவில்லை.
இதற்கிடையில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கப்பூரில் இருந்து பிசியோதெரபி மருத்துவர்கள் இருவர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை வருவார்கள் எனக் கூறப்படுகிறது.