ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தின் அதிகாரபூர்வ டிரைலர் – வீடியோ

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், சன் டிவி நெட்ஒர்க் சார்பில் கலாநிதி மாறன் தயாரிப்பில், ரஜினிகாந்த்  தற்போது நடித்து முடித்துள்ள படம் ‘ஜெயிலர்’.

இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரஜினி, முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார்.

அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ பாடல் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து இந்த படத்தின் இரண்டாவது பாடலான “ஹுக்கும்” எனப் பெயரிடப்பட்ட பாடல் வெளியானது. மூன்றாவது பாடலான “ஜுஜுபி” பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அண்மையில் ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இந்நிலையில், ‘ஜெயிலர்’ படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. இந்த டிரைலர் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.